பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 98 நினைவுக் குமிழிகள்.4 தில்லை. திரு சிலம்பொலியார் மூலம் அமைச்சர் முத்து சாமியை இதுபற்றி அண்ணாவை அணுகச்செய்தேன். இது பயன் தருவதாகத் தெரியவில்லை. அடுத்து துறையூர் பக்க எம். எல். ஏ. திரு. டி. பி. அழகமுத்து என்பார் மூலம் அப்போது கல்வி அமைச்சராக இருந்த நாவலர் வி. ஆர். நெடுஞ்செழியனைப் பல முறை பார்க்க முயன் றேன்; முடியவில்லை. ஒவ்வொரு தடவையும் ஏதாவது தடை நேரிடும். பின்னர் ஒரு முறை சட்டசபை கூட்டம் முடிந்ததும் பகல் 1-30க்கு அழகமுத்து என்னைச் சட்ட சபையை விட்டு வெளிவருவதற்கு முன் நாவலரைப் பார்க்க ஏற்பாடுசெய்தார். பசிநேரம்; என் கோரிக்கையை நன்றாகப் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. 'தமிழ் நாட்டில் தெலுங்கு வளர்ச்சிக்கு ஆந்திர அரசு மானியம் தருகின்றதா?’ என்று என்னைக் கேட்டுவிட்டு அருகி. லிருந்த தனி உதவி அலுவலரை நோக்கி, ' குறித்துக் கொள். தெலுங்கு வளர்ச்சிக்கு நாம் ஆந்திர அரசுக்கு எழுத வேண்டும். நாளை நினைவு படுத்துக' என்றார். "ஐயா!, ஓர் அரசுக்கு மற்றோர் அரசுக்கு இந்தச் சிறு தொகைக்காகக் கடிதம் எழுதுவது உசிதம் இல்லை. ஆங்கிலேயர் ஆட்சியில் சென்னை மாகாணம் என்ற பெயரிலிருந்தபோது சென்னைப் பல்கலைக் கழகத் தில் கன்னடம், மலையாளம், தெலுங்குத் துறைகளைத் தொடங்கியுள்ளனர். இந்தியத் துணைக் கண்டத்திலேயே மைய அரசு இந்தி மொழி வளர்ச்சிக்கு மாநிலங்கட்கு நிதிவசதி செய்து தருவது போலவே தமிழகம்தான் முதன் முதலாக தமிழ் வளர்ச்சிக்கென்று மானியம் வழங்கும் கொள்கையை வகுத்துக்கொண்டு தில்லிப் பல்கலைக் கழகத்திற்கு ஆண்டொன்றுக்கு ரூ. 10000/-மும், உஸ்மானியப் பல்கலைக் கழகத்திற்கு ரூ. 25,0000/-மும், அலகாபாத், ஆக்ரா பல்கலைக்கழகங்கட்கு ரூ. 10000/வீதமும் வழங்கி வருகின்றது. அண்மையில் தில்லிப் பல்கலைக்கழகம், இந்த உதவி பெறுவதை நிறுத்திக்