பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழக அரசு மானியம் பெறுவதில் தீவிர முயற்சி 夏99 கொண்டது. திருப்பதி தமிழக வட எல்லையில் உள்ளது. அங்குள்ள குன்றத்தை வடவேங்கடம் என்று தொல் காப்பியமும் மாலவன் குன்றம்' என்று தேசிய கவி பாரதியாரும் தமிழகத்தின் வடஎல்லையை குறிப்பிட்டிருப் பதைத் தாங்கள் அறிவீர்கள் அல்லவா? 'திருவேங்கடவன் பல்கலைக்கழகம் 1954 இல் தோன்றியது. தொடக்கத்தில் அப்பல்கலைக் கழகம் தமிழுக்கு யாதொரு வகையும் செய்யவில்லை. மொழிவழி மாநிலங்கள் பிரிய வேண்டும் என்ற மைய அரசின் கொள்கைப்படி 1953-இல் ஆந்திரம் தனியாகப் பிரிந்த பொழுது திருப்பதியைத் தமிழகமும் ஆந்திரமும் உரிமை கொண்டாடின. தமிழகத்திற்குரிய சென்னையையும் ஆந்திரத்தில் சேர்க்க உரிமைக் குரல் எழுப்பினர் ஆந்திரர் கள். எனினும் சிறந்த இராஜ தந்திரியாகிய நம் அருமை இராஜாஜி அவர்கள் யோசனைப்படி திருப்பதி ஆந்திரா வுக்குச் சென்றது; சென்னை நம்மிடமே இருந்து விட்டது. இந்த உரிமைப் போராட்டத்தில் வெளிச்சத்தைவிட வெப்பமே அதிகம் தோன்றியது, இருமொழிக்குரியவர் களும் ஒருவரையொருவர் வெறுக்கலாயினர். இந்த வெறுப்பு மொழி வெறுப்பு வரையிலும் சென்றது. வேரில் * வெந்நீரை விட்டு அழித்ததுபோல்’ திருப்பதியில் அடி மட்டத்திலேயே தமிழ்ப்படிப்பு இல்லாது செய்தனர். கீழ்த்திசைக் கல்லூரியிலும் வித்துவான் முதலிய வகுப்புகள் இல்லாது செய்துவிட்டனர். அப்பொழுது தேவஸ்தான நிர்வாக அதிகாரியாக இருந்த திரு சி. அண்ணாராவ் மிக்க செல்வாக்குடன் விளங்கியவர். அவரும் வேறு சில அரசியல்வாதிகளும் சேர்த்து கொண்டு அடிமட்டத்தில் தமிழ் இல்லாது செய்தனர். இப்படிப்பு இருப்பின் எப்பொழுதாவது திருப்பதி தமிழ் நாட்டுக்குக்குரியது என்ற கிளர்ச்சி எழத்தான் செய்யும் என்ற முன் நினைவுடன் இவ்வாறு செய்தனர் போலும்!