பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2豊伊 நினைவுக் குமிழிகள்-4 'பல்கலைக் கழக மட்டத்திலாவது தமிழ்ப் படிப்பு இருக்கட்டும்; அதிலும் எல்லைப் பகுதியில் இருப்பின் பயனுடையதாக இருக்கும்’ என்ற சிறந்த நீள்நோக்கைக் கொண்ட துணைவேந்தர் கோவிந்தராஜுலு நாயுடு 1960 ஜூலை முதல் விரிவுரையாளர் நிலையில் ஒருவரை நியமிக்க ஏற்பாடு செய்தார். நானும் காரைக்குடியில் பேராசிரியர் பதவியைத் துறந்து திருப்பதியில் பல்கலைக் கழக மட்டத்தில் தமிழை நிலைநிறுத்த வேண்டும் என்று கருதியே பல்வேறு இன்னல்களையும் பொருட்படுத்தாது, சிறுவர்களின் கல்வியின் பொருட்டுக் குடும்பத்தைக் காரைக்குடியில் விட்டு, கணிசமான பொருளிழப்பில் விரிவுரையாளர் பதவியை ஏற்றேன். இப்போது தமிழக அரசின் தமிழ் வளர்ச்சிக் கொள்கையைப் பயன்படுத்திக் கொண்டு பல்கலைக் கழகத்தில் எம்.ஏ. எம். ஃபில், , பிஎச். டி மட்டத்தில் தமிழை நிலை நிறுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் திருப்பதி சென்றேன்; இப்போது அதன் பொருட்டுதான் உங்கள் முன் நிற்கின்றேன். 'தெலுங்கு மாநில அரசிடமிருந்து பல்கலைக் கழக மட்டத்தில் தெலுங்கு வளர்ச்சிக்கு மானியம் பெற வேண்டும் என நினைத்தால் மதுரைப் பல்கலைக் கழகத் துணைவேந்தரை ஆந்திர மாநில அரசுக்கு எழுதச் சொல்லுங்கள். துணைவேந்தரே எழுதினால் விரைவில் பலன் கிடைக்கும்" என்றேன். தாம் கவனிப்பதாகச் சொல்லி என்னை அனுப்பி விட்டார். இதனாலும் பயன் விரைவில் தெரியவில்லை. மனம் உடைந்து போனேன்; இந்நிலையில் பேரறிஞர் அண்ணா வும் தீராத நோய்வாய்ப்பட்டு விட்டார். அவர் நோய்வாய்ப்பட்டாலும் கொள்கையளவில் எவரும் முடிவு எடுக்கலாம். ஆனால் அவ்வாறு செய்யவில்லை. ஆகவே கிராமசாலையில் (Village Road) உள்ள நிழல் சாலையி னுள் (Avenue Road) அமைந்துள்ள அவருடைய வீட்டை வட்டமிட்டேன். அப்போது முதல்வர் அறிஞர் அண்ணா