பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழக அரசு மானியம் பெறுவதில் தீவிர முயற்சி 20 I வுக்குத் தலைமைச் செயலராக இருந்தார் திரு. K. சொக்கலிங்கம் IAS அவர்கள்; தனி எழுத்தராக இருந்தவர் திரு. P. K. சுவாமிநாதன் (இப்போது சட்டப் பேரவை நிருபராக இருப்பவர்) என்பவர். அண்ணாவை தல்ல நிலையிலிருக்கும் போதுதான் பார்க்க வாய்ப்பு இல்லையென்றாலும் இப்போதும் மருத்துவர் அதுமதி இல்லாததால் பார்க்க இயலவில்லை. ஒவ்வொரு கட்டத் திலும் ஆகூழ் இல்லாது அவதிப்படும் நிலையை நினைந்து நினைந்து ஏங்கினேன். திரு. சுவாமிநாதன் அவர்கள் கோப்பு நகருவதைக் கவனித்து ஆவன செய்வதாகக் கூறினார். இதற்கிடையில் திரு. K. சொக்கலிங்கம் அவர்களை அவர் இல்லத்தில் (தேனாம்பேட்டையில் உள்ளது) கண்டு பேசலாம் என்று என் அரிய நண்பர் திரு. R மதவடை' (துணைச் செயலர், வேளாண்மைத்துறை) என்பாருடன் சென்றேன். திரு. மதவடைமூலம் தான் திரு. சொக்கவிங்கம் எனக்கு அறிமுகம் ஆனார். நாங்கள் சென்ற நேரம் காலை 3-00 மணி. திரு. சொக்கவிங்கம் இறைவழிபாட்டிலிருந்தார். வெளியில் ஒரு சிறிய மண்டபத்தில் சில நாற்காலிகள் இருந்தன. ஒரு சிறு மேசையின்மீது அன்றைய தமிழ், ஆங்கிலச் செய்தித் தாள்கள் இருந்தன. "நாம் இருக்கையில் அமரலாம்’ ’ என்றேன். திரு. மதவடை வேண்டா: வெளியிலேயே நின்று கொண்டிருப்போம்' என்றார். சுமார் அரைமணி நேரம் காத்திருந்தோம். இச்சமயத்தில் ஒரு பெருங்கூட்டம் (சுமார் 200-300 பேர்) வந்தது. கூட்டம் வீட்டைச் சூழ்ந்திருக்க நான்கு பேர் மடமட வென்று மண்டபத்தில் நுழைந்து இருக்கைகளில் அமர்த்து கொண்டு செய்தித் 1. இவர் இன்றில்லை. சில ஆண்டுகட்கு முன்னர் (1982) திருநாடு அலங்கரித்தார்.