பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 நினைவுக் குமிழிகள்-4 தாள்களை விரித்தவண்ணம், இன்று இரண்டிலொன்று பார்த்து விடுவோம்' என்று உரத்த குரலில் பேசினர். திரு. சொக்கலிங்கம் இறைவழிபாட்டை முடித்துக் கொண்டு வெளியில் தலையை நீட்டும் போது முகத்தில் சினக்குறி தென்பட்டது. என்ன அப்பா, கலாட்டா?* என்று சொல்லிக் கொண்டு வெளியில் வந்தார்; நின்று கொண்டே பேசினார். இருக்கைகளில் இருந்தவர்களும் எழுந்து நின்றனர். அவர்களுள் ஒருவர், என்ன சார்: நேற்று தலைமைச் செயலகத்திற்கு வந்தோம் தங்களைப் பார்க்க. உள்ளே இருந்து கொண்டே இல்லை’ என்ற தகவலை அனுப்பி எங்களை அவமதித்தீர்கள். நாங்களும் ஏமாற்றத்துடன் திரும்பினோம். இப்போது இரண்டி லொன்று பார்த்து விடலாம் என்று வந்திருக்கின்றோம். வெளியில் ஒரு பெருங்கூட்டம் காத்திருக்கின்றது . என்றார். திரு சொக்கலிங்கத்தின் முகத்தில் ஈஆடவில்லை. சூழ்நிலையை நன்கு புரிந்து கொண்டார். சிரமத்துடன் முகத்தில் புன்முறுவலை வரவழைத்துக் கொண்டு, "என்ன அப்பா வெங்கிட்டு (ஏதோ பெயர் சொல்லிக் கூப்பிட்டு) நீ கூட இப்படி நடந்து கொள்கின்றாய்? நேற்று நீங்கள் தலைமைச் செயலகம் வந்தபொழுது உண்மையில் உள்ளேதான் இருந்தேன். திரு ம. பொ. சி. சொல்லி அனுப்பி இருந்தார்; தொலைபேசி மூலமும் பேசினார். நானும் உரிய அமைச்சருடன் உங்கள் விஷயத்தைப் பற்றிதான் ஆய்ந்து கொண்டிருந்தேன். காரியம் சுமுகமாக முடிந்துவிடும். கவலைப்படவேண்டா' என்று சொல்லி அமைதிப்படுத்தி அனுப்பினார். நாங்கள் 'இவர்கள் வன்னியர் தேனாம்பேட்டையைச் சேர்ந்தவர் கள் என்றும், ஏதோ இடத்தகராறு பற்றி வந்துள்ளார். கள் என்றும் ஊகித்துக் கொண்டோம். திரு சொக்க விங்கம் சூழ்நிலையை நன்கு புரிந்து கொண்டு கூட்டத் தைச் சமாளித்த முறை எங்களை வியக்க வைத்தது. முதல் நாள் செயலகத்தில் நடந்து கொண்ட முறையும்