பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழக அரசு மானியம் பெறுவதில் தீவிர முயற்சி 203. அன்று இல்லத்தில் சமாளித்த முறையையும் சிந்தித்தோம்: எவ்வளவு அதிகாரம் இருந்தாலும் சில சமயத்தில் அதைப் பயன்படுத்த முடியாத நிலையும் நேரிடும் என்பதை அறிந்து கொண்டோம். குடியாட்சியில் (Democracy) கும்பலாட்சி (Mobocracy) செயற்பட்ட விந்தையும் தங்கள் கோரிக்கையை நிறைவேற்றிக் கொள்ளும் விந்தையும் எங்களைச் சிந்திக்க வைத்தன. திரு. சொக்கலிங்கம் எங்களை இன்முகத்துடன் வரவேற்று அமரச் சொல்லி நாங்கள் வந்த வேலையைப் பற்றி உசாவினார். திரு மதவடை திருப்பதிக்கு மானியம் பெறும் விஷயத்தைப் பற்றி எடுத்துரைத்து சுமார் எட்டு ஒன்பது ஆண்டுகளாக நான் அலைவதைப் பற்றி விளக்கி னார். நான் தட்டச்சு செய்து கையில் தயாராக வைத்திருந்த விண்ணப்பத்தை நீட்டினேன். அதை வாங்கிப் பார்த்தவர் "நான் இந்தக் கோப்பைப் பார்த்தது நினைவு இருக்கிறது. 11-12 மணி சுமாருக்கு அண்ணா இல்லத்திற்கு வாருங்கள். நிலைமையைக் கண்டு சொல்வேன்’ என்று சொல்லி விடை கொடுத் தனுப்பினார். சற்றேறக் குறைய பகல் பன்னிரண்டு மணிக்கு துங்கம் பாக்கத்திலுள்ள அண்ணா இல்லத்திற்குச் சென்றேன். சொல்லிய படியே திரு சொக்கலிங்கம் கோப்பைப் பார்த்து நிலையைத் தெரிந்து வைத்திருந்தார். என்னைப் பார்த்ததும் உள் அறை ஒன்றில் அமரச் சொல்லி, 'அண்ணா நிலைமை மோசமாகிக் கொண்டு வருகிறது. கோப்புகள் மலைபோல் குவிந்து கிடக்கின்றன. நீங்கள் எழுதிய ஒவ்வொரு கடிதத்தின் மீதும் "திருப்பதியைக் கவனிக்க வேண்டும். திரு பதியை ஆந்திரத்திற்கு விட்டுக் கொடுத்து விட்டாலும், தமிழாவது அங்கு வளர்வதற்கு உதவவேண்டும். இதற்கெனவே கங்கணம் கட்டிக் கொண்டு சென்றுள்ள திரு ரெட்டியாரை ஊக்குவிக்க