பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2.94 நினைவுக் குமிழிகள்-4 வேண்டும்' என்ற குறிப்புகள் அண்ணாவின் கைப்பட எழுதியிருப்பதாகவும் திரு ம.பொ.சிக்கு நான் எழுதி அவர் அண்ணாவுக்கு அனுப்பிய கடிதத்தின் மீதும் இதே வாசகங்கள் எழுதியிருப்பதையும் கூறினார். 'அண்ணா வுக்கு ஏதாவது ஆகிவிட்டால் அடுத்து முதல்வர் யார்?' என்ற விஷயம் சர்ச்சையில் இருக்கிறது. சில நாட்கள் பொறுங்கள். எல்லாம் சாதகமாக முடியும்’ என்று சொல்லி உற்சாகப் படுத்தி அனுப்பினார். ஏற்கெனவே துணைச் செயலர் திரு கோ.முத்துப் பிள்ளையைத் தலைமைச் செயலகத்தில் பார்த்திருந்தேன். திரும்பவும் தலைமைச் செயலகத்திற்கு வந்து திரு சொக்க லிங்கம் சொல்லிய விவரங்களை எல்லாம் திரு பிள்ளை யிடம் தெரிவித்தேன். திரு. முத்துப் பிள்ளையும் 'நீங்கள் அமைதியாகத் திரும்புங்கள். தமிழ் வளர்ச்சிக்கு நிதி வழங்க வேண்டும் என்பது அரசு கொள்கையாக இருப்பு தால் நீங்கள் கவலைப்பட வேண்டா. நான் பார்த்துக் கொள்ளுகின்றேன். இதில் ஓர் அமைச்சரே பொறுப்பு எடுத்துக் கொண்டிருந்தால் எப்போதே மானியம் கிட்ைத் திருக்கும்' என்று சொல்லி அனுப்பினார். நானும் ஓரளவு மன நிறைவுடன் ஊர் திரும்பினேன். இந்நிலையில் பேராசிரியர் நாயுடு அவர்கட்கும் மூன்றாவது முறை பதவி கிடைக்கவில்லை. சென்னைப் பல்கலைக்கழகத்தில் டாக்டர் ஏ.எல். முதலியாரைப் போல் தானும் பல ஆண்டுகள் (திருமுதலியார் 25 ஆண்டுகட்கு மேல் பதவி வகித்தவர்-அதுவும் மருத்துவத் துறையிலிருந்து ஒய்வு பெற்றபின்) பதவியிலிருக்க விரும்பினார். என் செய்வது? டாக்டர் முதலியாருக்கு இருந்த சாதுரியம்-ஏன்? சாணக்கியம்-அரசியல் கலப்பின்மை, சாதிப்பூசலில் ஈடுபடாமை போன்றவை பேராசிரியர் நாயுடுவுக்கு இல்லையே. இப்படிச் சொல்வதைவிட டாக்டர் முதலியாருக்கு ஊழ் துணை