பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதிய துணைவேந்தர் டாக்டர் W. C. வாமன்ராவ் 2 0.5. செய்தது: பேராசிரியர் நாயுடுவுக்கு அது துணை செய்ய வில்லை’ என்று கொள்வதே பொருத்தமானது என்பது என் கணிப்பு. மற்றும் டாக்டர் முதலியார் காலத்தில் துணைவேந்தரை நியமிக்கும் பொறுப்பு பேரவையின் (Senate) பொறுப்பில் இருந்தது. திருநாயுடு அவர்களின் காலத்தில் அரசுப் பொறுப்பிற்குப் போய்விட்டது. குமிழி.181 27. புதிய துணைவேந்தர் டாக்டர் W..ே வாமன்ராவ் நீலக சஞ்சீவ ரெட்டி ஆந்திர மாநிலம் முதலமைச்ச ராகப் பணியாற்றி வருகின்றார். பேராசிரியர் எஸ், கோவிந்த ராஜுலு நாயுடுவிற்குப் பின் யார் திருவேங்கடவன் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் என்ற பிரச்சினை எழுகின்றது. இப்போது துணை வேந்தரின் பதவிக் காலம் ஐந்தாண்டு என்ற நியதிதான் இருந்து வந்தது. ஆந்திர மாநிலத்தில் இன்றளவும் ரெட்டி நாயுடு சாதியாருக்கிடையே எல்லா நிலைகளிலும் மோதல்கள் இருந்து வருகின்றன. கல்வி நிலையங்களில், குறிப்பாகப் பல்கலைக் கழக வளாகத்திலாவது இதைத் தவிர்த்தால்தான் மாணாக்கரின் கல்வி முறை நன்கு அமையும் என நினைத்தார் முதல் அமைச்சர் நீலம் சஞ்சீவ ரெட்டி. நாட்டு நலனில் அக்கறை கொண்ட பழம் பெருந்தலைவர்களில் இவர் ஒருவர்; பழைய பரம்பரை யைச் சேர்ந்தவர். தமிழகத்தில் காமராசர் எப்படிப் புகழுடன் திகழ்ந்தாரோ அப்படி ஆந்திர மாநிலத்தில்