பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

罗莎母 நினைவுக் குமிழிகள்-4 பெரும் புகழுடன் திகழ்ந்தவர் திருரெட்டி இருவருமே நெருங்கிய நண்பர்கள். அந்தக் காலத்தில் காங்கிரஸ் கட்சியில் தூய்மை இருந்தது. குறை இல்லை என்று சொல்ல முடியாது; சுயநலம் மிக்க தலைவர்களே இல்லை என்றும் சொல்ல முடியாது. குறைகள் குறைவாகவும் நிறைகள் அதிகமாவும் இருந்தன. குணம் நாடிக் குற்றம் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல் என்ற வள்ளுவரின் அளவுகோலைப் பயன்படுத்திக் கொண்டால் தெளிவு பிறக்கும். இரண்டு சாதியாரிலும் வேறுபட்ட ஒருவரை நியமித் தால் பல்கலைக் கழகத்திலாவது இத்தகைய மோதல் களைத் தவிர்க்கலாம் என்ற பேரெண்ணம் கொண்ட முதல் அமைச்சர் கல்வி இயக்குநராகப் பணியாற்றி அச்சமயம் ஒய்வு பெற்றிருந்த டாக்டர் W. C. வாமன்ராவ் என்பாரை நியமித்தார். தாம் எதிர்பார்த்த பலன்களையும் கண்டார். இந்த டாக்டர் V. C. வாமன்ராவ் யார்? திருப்பதியில் உள்ள சில பிராமணர்கள் இவர் கர்நாடக மாநிலத்தைச் சார்ந்த கன்னட பிராமணர் என நினைத்தார்கள். ஆந்திர மாநிலத்தில் ராவ்' பட்டத்தை வைசியர்கள் (கோமுட்டி கள்), பிராமணர்கள் (மத்வர்களில் வேறானவர்கள்) ,கம்ம நாயுடுமார்கள், வெலமநாயுடுமார்கள் போன்ற வேறு இனத்தார்களும் குட்டிக் கொள்ளுகின்றார்கள். அரிசனங் கள் என்பவர்கள் கூட இப்பட்டத்தைச் சூட்டிக் கொள்ளு இன்றனர் என்று கேள்வியுற்றிருக்கின்றேன். இவர்கட்கு அய்யா' என்ற பட்டமும் வழங்கி வருவதை நன்கு அறிவேன். சென்னை வேலூர் போன்ற நகரங்களில் இந்த சராவ் பட்டம் முதலியார்கட்கும் உண்டு. தவிர தமிழகத் 1. குறள்-504 (தெரிந்து தெளிதல்)