பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதிய துணைவேந்தர் டாக்டர் W. C. வாமன்ராவ் 207 தில் குறிப்பாக சென்னை மாநகரில் பல சாதியாரும் பிள்ளை, முதலியார் என்ற பட்டத்தைச் சூட்டிக் கொள்வது நடைமுறையில் உள்ளது. திருவள்ளூர் (திருஎவ்வுளுர்) பக்கத்தில் அகமுடையர், வன்னியர் இவர் கள் 'ரெட்டி பட்டத்தையும் சூட்டிக் கொள்வதையும் அறிவேன். சர். கே. வி. ரெட்டி நாயுடு என்பவர் கம்மா நாயுடு என்பது தமிழகத்தில் பெரும்பாலோர்க்குத் தெரியாது. ரெட்டி வகுப்பைச் சேர்ந்தவர் என்றே இன்றும் கருதுகின்றனர். திரு. வாமன்ராவ் திருப்பதி வரு வதற்கு முன்னரும், வந்த பின்னரும் பிராமணர்கள் கன்னட பிராமணர் என உறுதி கொண்டனர். கம்மா நாயுடுமார்கள் தங்கள் இனத்தைச் சார்ந்தவர்தான் என்று கருதினர். ஒரிரு மாதங்கள் வரை துணைவேந்தரின் சாதியைப் பற்றி கடுகு, துவரை உள்ளங்கொண்ட மக்கள்’ ஆராய்ந்தனர்; தவறான முடிவுகளையே கொண்டனர். எல்லாச் சாதியாரும் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த பொழுது ரெட்டி குல மக்கள் இதைப் பற்றிப் பேசா திருந்தது எனக்கு வியப்பினை அளித்தது. என் மனத்தில் மூன்று எண்ணங்கள் தோன்றின. ஒன்று, தங்கள் இனத்தைச் சேர்ந்தவர் அல்லர் புதிய துணைவேந்தர் என்பது. இரண்டு, சாதி ஆராய்ச்சி பற்றிய குறுகிய எண்ணம் இவர்களிடம் இல்லை என்பது. மூன்று, தங்க வினத்தாருக்கு ஏதாவது சலுகை தருவதாக இருந்தாலும் பிற சமூகத்தைச் சார்ந்த தகுதியானவர்களை ஒதுக்கி விட்டுத் தம் இனத்தைச் சார்ந்த தகுதியற்றவர்கட்குத் தாரார் என்பது. பதினேழு ஆண்டு திருப்பதி வாழ்வில் இந்த உண்மைகளை அநுபவ வாயிலாக அறிய முடிந்தது. இனி டாக்டர் W. C. வாமனராவைப் பற்றிப் பின்னர் அவரிடம்நன்றாகப் பழகின பிறகு அறிந்தசெய்திகள் இவை, இவருடைய பாட்டனார் நைசாம் நவாப் ஆட்சியில் ஒர் அலுவலராகச் சேர்ந்தார். தந்தையார் வாழ்க்கையும் ஐதரபாத்தில் கழிந்தது. திரு. வாமன்ராவ் தமிழ் கற்கவும்