பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

逻●8 நினைவுக் குமிழிகள்-4 வாய்ப்பில்லை; தெலுங்கு கற்கவும் வாய்ப்பில்லை. தொடக்கநிலைப் பள்ளியிலிருந்தே உருது பயின்றார். உயர்நிலைப் பள்ளியில் ஆங்கிலத்தைத் தவிர அனைத்துப் பாடங்களையும் உருது மொழியிலேயே கற்றார். கல்லூரி யில்தான் ஆங்கிலத்தின் மூலம் கற்கும் வாய்ப்பு ஏற்பட்டது. எம்.ஏ., எல்.டி பயின்று உயர்நிலைப் பள்ளி ஆசிரியராகத் தம் வாழ்க்கையைத் தொடங்கித் தலைமையாசிரியர், மாவட்டக் கல்வி அதிகாரி என்றெல்லாம் பதவிகளில் உயர்வுகள் பெற்றார், நவாப் செலவில் இங்கிலாந்து சென்று பயின்று, ஆய்ந்து, கல்வித் துறையில் டாக்டர் (Ph.D) பட்டமும் பெற்றார். இந்தியாவுக்குத் திரும்பிய சில ஆண்டுகளில் கல்வித்துறை இயக்குநராகச் சில ஆண்டு கள் பணியாற்றி ஒய்வு பெற்றார். ஒய்வு பெற்ற நிலையில் தான் நீலம் சஞ்சீவரெட்டி இவரைத் துணைவேந்தராக நியமித்தார். இவர் பூர்வீகமாக இராய வேலூரைச் சேர்ந்தவர்; முதலியார் வகுப்பைச் சேர்ந்தவர். தமிழிலும் தெலுங்கிலும் நன்கு பேசுவார். ஆனால் இமமொழிகளை படிக்கவும், எழுதவும் தெரியாது. 'தாய்மொழியாகிய தமிழைக்கூட மறக்கும் படி நேர்ந்து விட்டதே. தமிழகத்திலிருந்து 500 கல் தொலை விலிருந்தும் இந்த நிலை ஏற்பட்டு விட்டதே என்று. நினைக்கும்போது மிகவருத்தமாக இருக்கின்றது’ என்றேன். நீங்கள் சொல்வது உண்மைதான். நான் வேலூருக்கு வந்து போவதற்கும் வாய்ப்பில்லை. உறவினர்களே அற்றுப் போய்விட்டனர். வந்து போய்க் கொண்டிருந்தால் மொழித் தொடர்பு அற்றுப்போகாமலாவதுஇருந்திருக்கும். ஆனால் தமிழில் என் பெயரையும் என் அன்னையார் பெயரையும் எழுதத் தெரியும்' என்று பெருமிதமாகச் சொல்லிக் கொணடார்.