பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதிய துணைவேந்தர் டாக்டர் W. C. வாமனராவ் 209 எழுதிக்காட்டச் சொன்னேன். தம் பெயரை 'வமணரவ்' என்றும், அன்னை யார் பெயரை 'அனடல்’ என்றும் எழுதிக் காட்டினார். ' குறில், நெடில்’ என்ற எண்ணமே தெரியாததை நினைத்துக் கொண்டேன். ண-னகர வேற்றுமையும் ள-லகர வேற்றுமையும் கூட அறியவில்லையே என்றும் கருதினேன். தமிழகத்தில் முறை யாகத் தமிழ் கற்கும் சிறுவர்கட்கும் இவ்வேற்றுமை தெளி வாகப் பல ஆண்டுகள் ஆகின்றதே என்று மனத்தைச் சமாதானம் செய்து கொண்டேன். தமிழை மறந்தாலும் தமிழினத்தின் தொடர்பு அற்றுப் போனாலும் தமிழின் மீதும் தமிழர்கள் மீதும் அளவற்ற அன்பும் பாசமும் வைத்திருந்தார் என்பதைக் கண்டு வியந்து போனேன். தமிழகத்தில் தெலுங்கை எழுதப் படிக்கத் தெரியா திருந்தும் என்னைத் தெலுங்கன்’ என்று சில மேலிடங்கள் நினைத்துக் கொண்டு இருப்பதற்கும், திருப்பதியில் (ஆந்திரத்தில்) என்னைத் தமிழன்’ என்று சொல்லிக் கொண்டிருப்பதற்கும் காரணம் இன்னும் எனக்குப் புரிய வில்லை. இதனால் சில நெருக்கடியான நிலையில் இடையூறுகள் குறுக்கிடுகின்றதையும் செரிமானம் செய்து கொள்ள முடியவில்லை. ஆனால் டாக்டர் W. C. வாமன்ராவ் என்னைத் 'தமிழா' என்றே கருதுவார். இதற்கு முன் துணைவேந்த ராக இருந்த எஸ். கோவிந்தராஜுலு நாயுடு என்னை எப்படிக் கருதினார் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் என்மீது அளவற்ற அன்பு வைத்திருந்தார் என்பது மட்டிலும் தெளிவாகத் தெரிந்தது. ஒரு சில ஆண்டுகள் முதல்வராக இருந்த பேராசிரியர் டி. ஏ. புருடோத்தம் என்னை ரெட்டி-நாயுடு என்ற வேற்றுமைக் கண் கொண்டு பார்த்தார் என்பதைப் பல நிகழ்ச்சிகளால் தெரிந்து கொண்டேன். ஆனால் நான் முதன்முதலாகத் திருப்பதியில் பணியேற்றபோது தற்காலிக முதல்வராக நி-14