பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 1 0 நினைவுக் குமிழிகள்-4 ساحتجابجاییکه இருந்த பேராசிரியர் எஸ். இராமச்சந்திர ராவ் (கன்னட பிராமணர்) என்னைத் தமிழர்' என்றே கருதுவார். தமிழகத்தில் பிறந்து வளர்ந்தவராதலால் தன்னைத் தமிழர் என்றே சொல்லிக் கொள்வார்; பெருமிதமாகவும் சொல்லிக் கொள்வார். திருப்பதி தமிழ்ச் சொல்; "திருமலை தமிழ்ச் சொல். இப்படியிருக்க திருப்பதி’ என்ற சொல்லைத் தெலுங்குச் சொல்லாக மாற்ற முடியாமல் திருமலை என்ற சொல்லை தெலுங்குச் சொல்லாக மாற்றுவதாக நினைத்துக் கொண்டு திருமல’ என்று மாற்றிவிட்டார்களே. 'மல’ என்பது மல்ம்' (அழுக்கு) என்ற பொருளைத் தருவதேயன்றி கொண்ட" (மலை) என்ற பொருளைத் தரவில்லையே' என்று அடிக்கடி என்னிடம் சொல்லுவதுண்டு. இயற்பியலில் பெரும்புகழ்பெற்ற ஒரு மத்வ பிராமணரின் தமிழ்ப் பற்றினை வியந்து வியந்து போற்றினேன். திருப்பதியி லிருந்த வரையிலும் இப்பெருமகனாரிடம் மிக நெருங்கிப் பழகும் வாய்ப்பும் இருந்து வந்தது. இறுதியில் திருப்பதியில் தான் கட்டின வீட்டை விற்றுவிட்டுச் சென்னையில் (குரோம் பேட்டையில்) வீடு வாங்கிக் குடியேறியதை அறிந்தேன்; சில ஆண்டுகளில் திரு நாடு அலங்கரித்த செய்தியும் எனக்கு எட்டியது. மிகவும் வருந்தினேன். தமிழகத்திலுள்ள ரெட்டி, நாயுடு, ராஜுக்கள் கிருஷ்ண தேவராயர் ஆட்சியின் பொழுது பல்வேறு சந்தர்ப்பங்களாலும் காரணங்களாலும் தமிழகத்திற்கு வந்தவர்கள். வந்தவர்கள் நிலையாக நின்றுவிட்டார்கள். இருதலை முறைக்கு முன்னர் தெலுங்கைப் படிக்கவும் எழுதவும் தெரிந்து கொண்டிருந்தனர். இப்போது, அஃதாவது மொழியின் அடிப்படையில் மாநிலங்கள் பிரிந்த பிறகு, இப்பயிற்சி அருகிக் கொண்டு வருகின்றது. இங்ஙனமே தமிழ்ப் படிப்போரும் எழுதுவோரும் சித்துார். திருப்பதி போன்ற இடங்களில் அருகிக் கொண்டு வரு கின்றனர். சென்னைமாநகரில் இருப்போருக்குத் தெலுங்கு