பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழக அரசு மானியம் பெற மேற்கண்ட முயற்சிகள்....2.11 கற்கும் வாய்ப்பு அடி மட்டத்தில் இருந்துவந்தாலும் பிழைப்பின் நிமித்தம் தெலுங்கை மறந்து தமிழையே படிக்கத் தொடங்கிவிட்டார்கள். சித்துார், திருப்பதி, ஐதரபாத் போன்ற பகுதிகளில் வாழும் தமிழர்கள் பிழைப்பின் நிமித்தம் தெலுங்கைப் படிக்கத் தொடங்கி விட்டனர்.ஆனால் பல்கலைக் கழக மட்டத்தில் ஆராய்ச்சி’ என்ற பெயரில் பூந்தொட்டிகளில் குரோட்டன்ஸ் செடிகளை வைத்து வளர்த்துப் போற்றுவதுபோல் இம்மொழிகள் இறவாது வாழ்ந்து வருகின்றன. உயர் மட்டத்தில் தாம் பிறந்த மண்ணில் வேலை வாய்ப்பு பெறமுடியாத தமிழர்கள்,தெலுங்கர்கள் இம்மட்டங்களில் வேலை வாய்ப்பு பெற்று வாழ்ந்து வருகின்றனர். இந்தியின் நில்ையும் இதுதான். வடநாட்டைச் சார்ந்த பலர் தென்னாட்டுப் பல்கலைக்கழகங்களில் இந்தத் துறையில் பணியாற்றி வருவது இதற்குச் சான்றாகும். எதிர்காலத்தில் இவர்கள் சந்ததியினர் நிலை என்ன ஆகும் என்பதைப் பற்றி யாரும் சரியாக சோதிடம் கூற முடியாது என்பது மட்டிலும் தெளிவு.