பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமிழி-184 28. தமிழக அரசு மானியம் பெற மேற்கொண்ட தீவிர முயற்சிகள் திருப்பதிக்கு வந்த வேலை தொடங்கப் பெற வில்லையே என்ற கவலை என் மனத்தில் அடி நாதமாக ஒலித்துக் கொண்டே இருந்தது. போாசிரியர் எஸ். கோவிந்தராஜுலு நாயுடு ஆட்சிக் காலத்தில் இது நிறைவேற முடியவில்லை. ஆனால் பிஎச். டிக்குப் பதிவு செய்துகொள்ள வேண்டிய வேலை முடிவுற்றது; பணியி லும் உற்சாகமாக இறங்கிவிட்டேன். ஆனால் டாக்டர் V. C. வாமன்ராவ் ஆட்சியில் அவரைப் பாராமலேயே அலுவலகத்தில் உள்ள சில நண்பர்களைக் கொண்டு தமிழக அரசுக்கு மானியம் கோரி ஒரு விண்ணப்பம் அனுப்ப ஏற்பாடு செய்துவிட்டேன். 'தமிழ்வளர்ச்சிக்காக இப்பல்கலைக் கழகத்திற்குத் தமிழக அரசினிடமிருந்து மானியம் கிடைக்குமா?’ என்ற கருத்துப்பட ஒரிரு வரிகளில் தான் விண்ணப்பம் சென்றது என்பதைப் பின்னர்தான் அறிந்தேன். அக்கடிதநகல் எனக்கு அனுப்பப் பெறவில்லை. ஆனால் இது தெரிந்ததும் தேவையை வலியுறுத்தி நானே பல கடிதங்களை எழுதினேன். ஒவ்வொரு கடிதத்தின் நகலையும் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைத்தேன். அடிக்கடி சென்னை சென்று தலைமைச் செயலகத்தில் வட்டமிட்டேன். அப்போது தமிழ்வளர்ச்சிக்கான துணைச் செயலர் (Deputy Secretary) பதவியில் ஒருவர்பின் ஒருவராக இருந்தவர்கள் பேராசிரியர் மு. இராசாக்கண்ணனார், பெரும் புலவர் மு. ரா. பெருமாள் முதலியார். இவர்கள் இருவரையும் பல