பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழக அரசு மானியம் பெற மேற்கண்டமுயற்சிகள்.21% முறை பார்த்துப் பேசினேன்; குறையிரந்தேன். தமிழக அரசு பிறமாநிலங்களில் தமிழ் வளர்ச்சிக்காக நிதிவழங்கும் கொள்கை இருந்தது. ஐதரபாத் (ஆந்திரம்), அலகபாத் (உத்திரப்பிரதேசம்) தில்லி இவ்விடங்களில் உள்ள நிறுவனங்கட்குத் தமிழ் வளர்ச்சிக்காக ஆண்டுக்குப் பத்தாயிரம் ரூபாய் விதம் வழங்கியும் வந்தனர். இவர்கள் மனம் வைத்துக் கோப்புகளில் பலமான குறிப்புகள் எழுதியிருந்திருந்தால் மானியம் கிடைத்திருக்கும். கீழ் மட்டத்தில் எழுத்தர்கள் எழுதி வைக்கும் குறிப்புகளைப் பாராமல் பொறிபோல் கைந் நாட்டுச் செய்து வந்தமை பின்னர் தெரிய வந்தது. யாரோ ஒரு கடை நிலை எழுத்தர். "திருவேங்கடவன் பல்கலைக் கழகம் செல்வச் சிறப்பு மிக்கது. அவர்களே தம் செலவில் தமிழை வளர்க்க முடியும்; வளர்த்துக் கொள்ள லாம்’ என்ற குறிப்பை எழுதி வைத்து விட்டார். அப்போது நடைபெற்றது காங்கிரசு ஆட்சி, திரு. M. பக்தவத்சலம் முதல் அமைச்சர், கல்வியும் நிதியும் அவர் பொறுப்பிலிருந்தன. செயலக அலுவலர்கள் மட்டத்திலேயே என் சந்திப்புகள் நிகழ்ந்தன. அமைச்சர் மட்டத்தில் நான் முயலவில்லை. மேற்குறிப்பிட்ட இரு பெரியார்களும் கீழ்மட்டத்தில் எழுதி வைத்த குறிப்பு களைப் பாராமலேயே (கொக்கிபோட்ட) கையெழுத்திட்ட செய்தி பின்னர் தெரிய வந்தது. தமிழ்ப் பற்றாளர்களாக இருந்தும், அரசின் கொள்கைப் போக்கு சாதகமாக இருந்தும், நான் பலமுறை வேண்டியும் இவர்கள் உதவ வில்லையே என்ற வருத்தம் இன்றும் என் மனத்தில் இருந்து கொண்டுதான் உள்ளது. நான் அமைச்சரைப் பார்த்திருந்தால் சாதகமாக முடிந்திருக்குமா என்று இப்போது நினைத்துப்பார்க்கின்றேன். நான் அமைச்சருக்கு வேண்டப்பட்டவனாக இருந்திருந்தால். ஒரு கால் சாதக மாக நடைபெற்றிருக்கலாம். ஆனால் நான் அப்படி இல்லையே: திக்கற்றவனாயிற்றே. இதனால்தான்