பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3】会棠 நினைவுக் குமிழிகள்-4 அமைச்சரை நான் சந்திக்கவில்லை; சந்திக்கவும் முயல வில்லை. ஆட்சிப் பொறுப்பைத் திறமையாக நடத்துபவர் கள் செயலர்களே யன்றி அமைச்சர்கள் அல்லர் என்பதை நான் நன்கு அறிவேன். ஓராண்டுக் கழித்து திருவேங்கடவன் பல்கலைக் கழகம் செல்வச் சிறப்புடையது. அவர்களே அவர்கள் செலவில் தமிழ் வளர்த்துக் கொள்ளலாம். இந்த அரசின் உதவி தேவையில்லை' என்ற போக்கில் அரசு ஆணை பிறந்தது. இஃது என்னைத்திடுக்கிடச் செய்தது. சென்னை சென்று சில நண்பர்கள் உதவியால் கோப்புகளிலுள்ள குறிப்புகளை அறிந்து கொள்ள முடிந்தது, இதனால் நான் அறிந்து கொண்ட உண்மை இது; 'திருவேங்கடவன் பல்கலைக் கழகமும் திருமலை-திருப்பதி தேவஸ்தானமும் ஒன்றே என்ற தவறான கருத்து கொண்டமை.தேவஸ்தான உண்டியில் குவியும் பணமும் இதர, திரவியமும், பல்வேறு சேவைகளில் கிடைக்கும் நிதிக்குவையும் பல்கலைக் கழகத் திற்குச் சொந்தம் என்ற முடிவு கொண்டமை. இன்றும் தமிழகத்திலுள்ள பெரும்பாலான பொதுமக்களும் தமிழகத் தலைமைச் செயலகத்திலுள்ள பலரும்-ஏன்? எல்லோருமே என்று கூடச் சொல்லலாம்-இக்கருத் துடையவர்களே, ஒரு கடைநிலை எழுத்தர் எடுத்த தவறான கருத்தினை மேல்மட்டம் வரையிலும் யாரும் பரிசீலனை செய்யாததால், தவறான ஆணைபிறப்பிப் பதற்குக் காரணம் ஆயிற்று. ஆட்சியில் பெரும்பாலான தவறான முடிவுகட்குப் பலமட்ட நிலைகளில் பணியாற்று: பவர்கள் தம் கடமைகளைச் சரியாக ஆற்றாமையால் இத்தகைய தவறுகள் நிகழ்கின்றன என்பதை சுமார் 45 ஆண்டுகள் பல்வேறு பொறுப்புகளிலிருந்த நான் நன்கு அறிவேன். இவர்கட்கு அறிவு கொளுத்த வேண்டுமானால் அந்த ஆண்டவனே முயன்றாலும் முடியாது என்று கூட. என்னைச் சிந்திக்க வைக்கின்றது.