பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழக அரசு மானியம் பெற மேற்கொண்ட முயற்சி...215 ஒருநாள் பதிவாளரைத் தனிமையில் சந்தித்து பல்கலைக் கழகத்தையும் தேவஸ்தானத்தையும் ஒன்று என்று குழம்பிய நிலையில் ஏற்பட்டதன் விளைவு எதிர் மறை முடிவாயிற்றென்றும், மற்றொரு விண்ணப்பம் அனுப்பி இதனை மறுபரிசீலனை செய்யுமாறு கோரலாம் என்றும் தெரிவித்தேன். நானும் சென்னை சென்று 'படியாய்க்கிடந்து இதனைக் கவனிப்பதாகக் கூறினேன். அதற்கு அவர் "நாங்கள் திரும்பவும் தமிழக அரசுக்கு பிச்சைக்காரத்தனமாக மற்றொரு விண்ணப்பம் அனுப்ப மாட்டோம்' என்று சொல்விவிட்டார். என்ன வேண்டியும் அசையவில்லை. நானும் விடாக் கொண்டன் ஆனேன். ஒரு நாள் ஞாயிறன்று அவர் இல்லம் சென்று என் நிலையை விளக்கினேன். ஐயா, புகழ் பெற்ற ஒரு நல்ல கல்லூரி யில் தமிழ்ப் பேராசிரியனாக (Professor) இருந்தேன். தமிழ் வெறியால் அதனைத் துறந்து, குடும்பத்தையும் சிறுவர் களின் தமிழ்க் கல்வியின் பொருட்டுக் காரைக்குடியில் விட்டு விட்டுத் திருப்பதியில் பல ஆண்டுகளாகத் தவிக்கின்றேன். தமிழக அரசுக் கொள்கையைப் பயன் படுத்திக் கொண்டு எப்படியாவது பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறையை ஏற்படுத்த வேண்டும் என்று வந்தேன். தமிழகத்தில் தலைமைச் செயலகத்திலும் தொல்லை; இங்குப் பல்கலைக் கழகத்திலும் தொல்லையாகப் போய் விட்டது. தங்களை என் நிலையில் வைத்துச் சிந்தித்துப் பாருங்கள். அப்படி இல்லாவிட்டாலும் நீங்கள் இளைஞனாக இருந்தபோது புதுக்கோட்டையிலும் விருது நகரிலும் தற்காலிகமாகப் பயிற்றுனர் (Tutor) வேலையில் தொல்லை 1. அப்போது பதிவாளராக இருந்தவர் திரு. K.S.S. சுப்பராஜு என்பவர். மிக நல்லவர். பேராசிரியராகத் தமிழகத்தில் புதுக்கோட்டை, விருதுநகர் முதலான இடங்களில் பணி யாற்றியவர்.