பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21 6 நினைவுக்குழிமிகள்.4 யுற்றதையாவது இப்போது நினைத்துப் பாருங்கள்' என்றேன். எதற்கும் 'கொடாக் கொண்டனாகவே' இருந்தார். இவரது "ஆணவ மலத்தை’ என்னால் நீக்க முடியாது என்று முடிவு கொண்டு மிக வருத்ததுடன் அறைக்குத் திரும்பினேன். அன்று மாலையே அருள்மிகு கோவிந்தராஜசுவாமி சந்நிதிக்குச் சென்றேன். எந்தக் கடவுளை வணங்கினாலும் அந்த வணக்கம் திருமாலுக்கே சென்று சேரும் என்பது வைணவக் கொள்கை. பெருமானே, உன்னைப் பைந்தமிழ்ப் பின் சென்ற பச்சைப் பசுங் கொண்டல் என்று சொல்லுகின்றார்களே. இஃது உண்மையா? அல்லது அரசியல் தலைவர்கள் போல் தமிழ்ப் பற்றாளன்போல் நடிக்கின்றாயா? இப்படி நடித்து உன் பக்தர்களைத் திசை திருப்புகின்றாயா?நான் குடும்பத்தை விட்டுத் திருப்பதியில் எப்படியும் தமிழ்த்துறையை ஏற்படுத்த வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு உன் சந்நிதிக்கு மிக அருகிலேயே அறையில் தங்கிக் கொண்டும் பல செளகர்யங்களைத் துறந்தும் தொல்லையுறுவது உன்கண்ணில் படவில்லையா? அர்ச்சகர்கள் உன் கண்களுக்குக் கீழே இறங்குமாறு திட்டி யுள்ள திருமண் காப்பு நான் துன்பப்படுவதைக் காணாத வாறு மறைக்கின்றதா? நீ உலகளந்த அன்று உன் திருவடி தீண்டியதால் பொல்லார் யாவரும் நல்லார் ஆகியிருக்க வேண்டுமே. இந்த வாமனன் பூமியில் உன் விருப்ப மான தமிழை வளர்ப்பதற்கு ஏன் இத்துணைத் துன்பங் களை எனக்கு விளைவிக்கின்றாய்? என் வழியில் பல் வேறு விதமாக தடைக்கற்களை ஏன் போடுகின்றாய்?...' என்பன போன்றவற்றை அவன் திருச்செவியில் சாற்றினேன். கண் களைத் திருமண் மறைத்தாலும் என் சொற்கள் காதுகளி 2. இவரிடம் நெருக்கமாகப் பழகி வந்தபோது அவ்வப்போது பேசிய குறிப்புகளைக் கொண்டு ஒரளவு இவர்தம் வாழ்க்கையில் தொல்லைப் பட்டத்தை அறிந்து கொண்டிருந்தேன்.