பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழக அரசு மானியம் பெற மேற்கொண்டமுயற்சி. 217 லாவது விழட்டும் என்று நினைத்து இவ்வாறு கதறினேன். இரவு சிற்றுண்டி கொண்டு அறைக்கு வந்தேன்: அன்றிரவு நன்றாக உறங்கினேன். மறுநாள் மாலை டாக்டர் வாமனராவ் (துணைவேந்தர்) அவர்களைப் பார்த்துப் பேசுவது என்று முடிவு கொண்டேன். திங்களன்று மாலை நான்கு மணிக்கு வீடு திரும்ப வேண்டிய நான் அரை மணி முன்னதாகத் திரும்பினேன். தன்றாக நீராடி சிற்றுண்டி கொண்டேன். சுமார் ஐந்தரை மணிக்குத் துணைவேந்தர் திருமாளிகைக்குச் சென்றேன். அவர் ஹாக்கா’ பிடித்துக் கொண்டு ஆனந்தமாக அதனை அநுபவித்துக் கொண்டிருந்தார். இவர் திருப்பதியிலிருந்த ஐந்தாண்டுக் காலமும் சமையல்காரனுடன் இவனும் ஒரு தமிழன்) தனியாகவே வாழ்ந்தார். ஹ"க்கா’ பிடித்துக் கொண்டிருக்கும்போது இவரைப் பார்ப்பது நல்ல நேரம். என்பதை நான் அநுபவத்தில் நன்கு அறிந்திருந்தேன். பேராசிரியர் கோவிந்த ராஜுலு நாயுடு அவர்களைப் போலவே இவரும் ஒருமணி நேரத்திற்கு மேலாக பேசிக் கொண்டிருப்பார். வந்த வேலையை இவரிடம் சுருக்க மாகத் தெரிவித்தேன். நான் காரைக்குடியிலிருந்து திருப்பதிக்கு வந்த நோக்கத்தையும், வந்த வரலாற்றையும் ஆதியோடந்தமாக விவரமாக விளக்கினேன். இதற்கு முன் அடிக்கடிச் சந்தித்ததில் என்னுடைய உழைப்பையும் எல்லையற்ற தமிழ்ப்பற்றையும் நன்கு அறிந்து கொண்டி ருந்தார். பிற பேராசிரியர்கள்மூலமும் கேட்டு அறிந்து கொண்டிருப்பார் என்பதையும் என்னால் ஊகித்துக் கொள்ள முடிந்தது. பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த துணை வேந்தர் சொன்னார்: (1) உங்கள் தமிழ் வெறியால் நீங்களே வந்து மாட்டிக் கொண்டு விட்டீர்கள். இதிலிருந்து நீங்கள் நல்ல முறையில் விடுவித்துக் கொள்ள மூடியாது. மிக்க சிரமத்துடன் பிஎச்.டிக்குப் பதிவு செய்து