பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21 & நினைவுக் குமிழிகள் கொண்டு விட்டீர்கள். விரைவில் பட்டம் பெற முயலுங்: கள். பட்டம் வந்ததும் நான் இங்கிருந்தால் உடனே உங்களைத் துணைப்பேராசிரியராக (Reader) உயர்த்திவிடு கின்றேன். பட்டம் வாங்காமல் செய்ய முடியாது. இப்போது கூட உங்கள் அநுபவம், எழுதியுள்ள அரிய நூல் கள், வயது இவற்றைக் கருதியே உயர்த்தலாம். இப்படிச் செய்தால் பல்கலைக் கழக வளாகத்திலும், வெளியிலும் வீணான பேச்சுக்கு இடம் கொடுத்ததாக முடியும். குறிப்பாக ஒரு தமிழனை, ஒரு தமிழனாக இருந்த துணைவேந்தர் தகுதியின்றி உயர்த்தி விட்டார் என்ற கூக்குரல் கிளம்பும். பொறாமையினால் உங்கட்கும் நீங்கள் அறியாமலேயே பல பகைவர்கள் இருப்பார்கள். நான் இங்கு வந்தது. குறித்துப் பொறுக்காத சில பகைவர்களும் தோன்றியிருப்பார்கள். சீசரின் மனைவி ஐயத்திற்கிட Ló'sir göl (g)G55 GagistGuð" (Caesar's wife should be aboue Suspicion) என்ற பழமொழியைக் கேட்டதில்லையா?" (2) நீங்கள் பல்கலைக் கழகம் எழுதுவதுபோல் ஒரு விண்ணப்ப நகல் நல்ல முறையில் ஆங்கிலத்தில் தயார் செய்யுங்கள். அதில் (அ) பல்கலைக்கழகத்தில் இருக்க வேண்டிய பலதுறைகளுள் தமிழ்த் துறையும் ஒன்று (ஆ) தமிழக எல்லையிலிருக்கும் திருப்பதிப் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறையின் இன்றியமையாமை (இ) தமிழ் பயிலும் மாணாக்கரின் தொகையைக் கணக்கிற்கு எடுத்துக் கொள்ள வேண்டாமை. (ஈ) தமிழாராய்ச்சிக்குத் திருப்பதி: நல்ல களம் என்பதை வற்புறுத்திக்காட்டுவது, (உ) எம். எ. மாணாக்கர்கள் இல்லா விட்டால், பிஎச்.டிக்கு ஒரிருவர் இருப்பார் என்பதைக் காட்டுதல், (ஊ) இரண்டு பகுதி களிலும் எப்போதும் சிலர் இருப்பர் என்பதைக் காட்டுவது (எ) தனிப்பட்ட ஆராய்ச்சிகளை மேற்கொள்வது, ஆராய்ச்சி நூல்களை வெளியிடுவது-என்பவை போன்ற காரணங்களைக் காட்டி நகல் ஒன்று மூன்று நாட்களுக்குள் என் கையில் தாருங்கள். விரைவில் ஆவன செய்யப்படும்.