பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/253

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழக அரசு மானியம் பெற மேற்கொண்ட முயற்சி.219 தமிழக அரசுக்கும் அனுப்பப்பெறும்;கடிதத்தின் நகல்'ஒன்று உங்கட்கும் அனுப்பப்படும்' என்று யோசனை கூறினார். இதுகாறும் அமைதியாக அலுவலகத்திற்கு வந்து கொண்டிருந்த துணைவேந்தரின் உண்மையான சொரூ பத்தைக் அன்று கண்டேன். தமிழ் நாட்டின்மீதும், தமிழ் இனத்தின்மீதும், தாம் படிக்க வாய்ப்பில்லாத தமிழ் மொழியின் மீதும் கொண்டிருந்த பற்றினைத் தெரிந்து கொண்டேன். அன்று மறுநாள் (செவ்வாயன்று) அருமை யான நகலைத் தயார் செய்து புதனன்று மாலையில் அவர் திருமாளிகையில் சந்தித்து நகலைப் படித்துக் காட்டி அவரிடம் அதைத் தந்தேன். நகலைக் கண்டு என் திறமையைப் பாராட்டினார். இப்பொழுதே உங்க ளப் பேராசிரியராகக் காண ஆசைதான். என் செய்வது? மலை யின்மீது நின்று கொண்டிருக்கும் மாலவன் கவனிப்பான்’ என்று வாழ்த்தினார். அந்த வாரத்தின் இறுதிக்குள் விண்ணப்பம் தமிழக அரசுக்கு அனுப்பப் பெற்றது. அதன் நகலும் என் கைக்கு வந்து சேர்ந்தது. என்றும் இல்லாத மகிழ்ச்சி ஏற்பட்டது, உற்சாகமும் பொங்கி எழுந்தது. இனி (அ) தமிழக அரசு (ஆ) ஆந்திரமாநில அரசு-இந்த இரண்டினை எப்படிச் சரிக்கட்டுவது? என்ற எண்ணத்தில் ஆராய்ச்சியில்- என் மனம் ஈடுபடத் தொடங்கியது.