பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமிழி-185 29. இராக்கெட்டு நூல் உதயம் Posses, திருப்பதிக்கு வந்த நாள் தொட்டே விண் வெளிச் செலவு பற்றியும், விண்வெளியை ஊடுருவித் திங்கள் மண்டிலத்தை நோக்கிச் செல்ல வேண்டிய முயற்சி பற்றியும் செய்தித் தாள்களில் செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன. திங்கள் மண்டிலப் பயணம் விரைவில் கூடும் என்ற நம்பிக்கையும் அறிவியலறிஞர்களிடையே கை இருந்து வந்தது. 1961-இல் 1970க்குள் அம்புலியில் மனிதன் இறங்க வேண்டும் என்பது அமெரிக்காவின் குறிக் கோள்.’’ என்ற கென்னடியின் அறிவிப்பும் செய்தித்தாளில் வெளிவந்ததைக் கண்டேன். பறக்கச் சிறகிருந்தால் வெண்ணிலாவே உங்கள் பக்கம் வந்து சேருவேனே வெண்ணிலாவே...' என்ற கவிமணியின் குரலும் கேட்டது. இது புதுமை களைக் கண்டு களிப்பெய்தத் துடிக்கும் மனிதன் காணும் கனவுகளைக் காட்டும் ஒரு கவிஞனின் குரலாக வெளிப் பட்டதாகக் கருதலாம், மேனாடுகளில் கி.பி. 160இல் எழுதப்பெற்ற கதை யொன்றில் கதைத் தலைவன் வானக் கப்பலில் செல்லு கின்றான். இவன் பல இடையூறுகளைத் தாண்டி, விபத்து மிக்க பகுதிகள் பலவற்றையும் கடந்து, எட்டு நாட்கள் கழித்து விண்வெளியில் ஒளிமிக்க தீவு ஒன்றினைக் கண்ணுறுகின்றான். இதுவே மதிமண்டலமாகும். இன் 1. கவிமணி : மலரும் மாலையும்-வெண்ணிலா-15