பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/255

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'இராக்கெட்டு நூல் உதயம் 2盔 ன்ொரு கதையாசிரியர் கதைத் தலைவனுக்குச் சிறகு, களைப் படைத்து விடுகின்றார். மதிமண்டலத்தை எட்டிய இவன் கதிரவன் மண்டலத்தையும் எட்டி விடுகின்றான். இதனைக் கண்ணுற்ற வானுலகத்தோர் சீற்றங்கொண்டு இவனைத் தரைக்கு அனுப்பி விடுகின்றனர். மீண்டும் அவன் விண்வெளிக்கு வர இயலாதிருக்க அவனது இறக்கை களையும் களைத்து விடுகின்றனர். இதற்குப் பல நூற்றாண்டுகட்குப் பிறகு (17-வது நூற்றாண்டில்) கெப்லர் எழுதிய கதைகளிலும், அவருக்குப் பின்னர் காட்வின் என்பாரும் பிறரும் எழுதிய நூல்களிலும் மதிமண்டலத்தைப்பற்றிய கருத்துகள் வருகின்றன கெப்லர் காலத்தில் சமயக் கோட்பாடுகட்கும் அரசியல் கருத்துகட்கும் புறம்பான கருத்துகளை எடுத்துரைப்பவர் கள் கடுந்தண்டனைக்குள்ளானதால் அவர்கள் தம் கருத்து களைக் கதை வடிவில் கற்பனைக் கூற்றுகள்போல் எடுத் துரைக்க வேண்டியதாயிற்று. இருபதாவது நூற்றாண்டில் வாழ்ந்த எச். ஜி. வெல்ஸ் என்ற புகழ் பெற்ற அறிஞரும் ** up # sou geol-isā tor#5fessit” (First men in the Moon) என்னும் புதினத்தில் பல கற்பனைக் கருத்துகளை உரு வாக்கியுள்ளார். சம்பாதி-சடாயு வரலாற்றிலும் விண்வெளிப் பயணம் பற்றிய செய்தி உண்டு. சூரிய சாரதியாகிய அருணன் என் பான் காசியப முனிவரது மனைவியாகிய விநதையின் வயிற்றில் பிறந்தவன்: கருடனுக்குத்தமையன். இடைக்குக் கீழ் உறுப்பில்லாதவன். சம்பாதியும் சடாயும் அருணனது மைந்தர்கள். இவர்கள் இருவரும் வானத்தில் உயர்ந்து பறக்குந் தன்மையுள்ள கழுகுகளின் அரசர்கள். இவர்கள் இருவரும் உயரப் பறக்கும் வல்லமை பெற்றிருந்தமையால் தேவலோகத்தைக் கர்ணவேண்டும் என்ற எண்ணத்தினால் வானத்திற் பறந்து கதிரவனைக் காணும் நிலைமையில் 2. கம்பரா. கிட்கிந்தை-சம்பாதிப் படலம் (5.3-61)