பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2忍2 நினைவுக் குமிழிகள்-4 இருந்தனர். சம்பாதியைவிட உயரமாகப் பறந்து சென்ற சடாயு கதிரவனின் வெப்பத்தைத் தாங்கமுடியாமல் வருந்திய போது, சம்பாதி தன் இறகுகளின்கீழ் அவனை இருக்க வைத்துக் காப்பாற்றினான். சம்பாதியின் சிறகுகள் தீய்ந்தமையால் கீழே விழுந்தான். சூரிய பகவான் அவன் நிலைக்கு இரங்கி வாநரர்கள் இராமநாமம் உச்சரிக்கும் போது, உன் சிறகுகள் மீண்டும் தளிர்க்கும்' என்று ஆசி கூறினான். இது வரலாறு. ஒரு வகையில் விண்வெளிப் பயணமாகும். இங்ங்ணம் கற்பனையாகவும் புராணங்களிலும் இருந்து வந்த எண்ணங்கள் இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் நடைமுறையில் செயற்பட்டன, பல அறிவியலறிஞர்கள், கனவாக இருந்து வந்த மதிமண்டலச் செலவினை நன வாக்க முயன்றனர். காடார்டு, ஒபெர்த் போன்ற அறிஞர் கள் இராக்கெட்டு ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். பல அரிய உண்மைகளையும் கண்டறிந்தனர். இந்த இராக்கெட்டு தான் விண்வெளிச் செலவுக்கு உறுதுணையாக இருக்கும் அற்புத ஊர்தி. 1959இல் இரஷ்யர்களும் 1964இல் அமெரிக்கர்களும் விண்வெளிப் பயணத்தில் வெற்றி கண் டனர். இன்னும் ஆறாண்டுகளில் அம்புலிக்கு மனிதனே சென்று திரும்பி வர வேண்டும் என்ற எண்ணம் தீவிரமாக மாக இருந்து வந்தது. விண்வெளிப் பயணங்கட்குப் பயன்படும் இராக்கெட்டு பற்றி ஒருசிறிய நூலை எழுத வேண்டும் என்ற எண்ணம் என் மனத்தில் எழுந்தது. அதை எழுதி முடித்தேன். இந்தப் பயணம் தொடங்கப் பெறுவதற்கு முன்னர் விண் வெளியில் எடையின்மை அநுபவம், விண்வெளியின் வெப்பம், அமுக்கம் இவை போன்ற செய்திகளை அறிவதற்கு இராக்கெட்டு துணை செய்கின்றது. இராக்கெட்டின் துணையால் தொலைக்காட்சி அமைப்பு, இராடார் அமைப்பு, தொலை ஒலிப்பான் அமைப் பு