பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* இராக்கெட்டு நூல் உதயம் 223 போன்ற அமைப்புகளடங்கிய சிறிய துணைக்கோள்களை விண்வெளியில் பல்லாயிரக்கணக்கான மைல் உயரங்கட்கு அனுப்பிப் பல செய்திகளை அறிதல் வேண்டும். இராக்கெட்டு (Rocket) என்றால் என்ன? இது சீறு வாணத்தின் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு செய்யப் பெற்ற ஒரு கருவி. இது தானியங்கி (Automobile) அல்லது வான ஊர்தியின் பொறி போன்ற ஒரு வகை 2. ¿rGom fl G, un f) (Internal Combustion Engine) -ggib. ஆனால், இஃது ஒருவகையில் இவற்றினின்றும் வேறுபடு கின்றது. இது தனக்குத் தேவையான உயிரியத்தைத் (Oxygen) தானே சுமந்து செல்கின்றது; மற்றவை தமக்கு வேண்டிய உயிரியத்தைக் காற்றினின்றும் பெறுகின்றது. மற்றும், இராக்கெட்டின் உட்புறத்தில் என்னென்ன பொருள்கள் தேவையோ அவற்றையெல்லாம் இராக்கெட்டுகள் சுமந்து செல்லுகின்றன. இக்காரணத் தால் அவை எங்கு வேண்டுமானாலும் செல்ல முடிகின்றது. காற்றே இல்லாத விண்வெளியிலும் அது பயணம் செய்ய முடிகின்றது. இந்தச் சிறு நூலில் 41 விளக்கப்படங்கள் அமைந்து விளக்கத்திற்குத் துணை செய்கின்றன. இராக்கெட்டின் ஆதி வரலாறு, இராக்கெட்டின் அமைப்பு, இதில் ஐசாக் நியூட்டன் கண்டறிந்த கவர்ச்சி விதி, இயக்கவிதி செயற் படும் விதம். இராக்கெட்டுகள் மேலே செல்லுங்கால் குறுக்கிடும் 98853; sel- (Sound barrier), Qaulil 15 தடை (Heat barrier) என்ற தடைகள், இவற்றைச் சமாளிக்கும் முறைகள் இவை தெளிவாக விளக்கப் பெறுகின்றன. இராக்கெட்டில் விமானி போல் செயற் படும் வழிகாட்டி அமைப்புகள் (Gaidance systems) நன்கு விளக்கப்பெறுகின்றன, இராக்கெட்டு கடந்து செல்ல வேண்டிய வளிமண்டலத்தின் (Atmosphere) அமைப்பு, அதில் அடிவளிமண்டலம் (Troposphere),