பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/258

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£24 நினைவுக் குமிழிகள்.: அடுக்கு வளி மண்டலம் (Stratosphere), வேதியியல். ldsor—splb. (Chemosphere), such up or, a th (Inosphere) என்று ஒன்றன் மேல் ஒன்றாக அமைந்திருக்கும் அற்புதம் தெளிவாக விளக்கப்பெறுகின்றது. ஆளில்லாத விண்கலங்கள், ஆளுள்ள விண்கலங்கள் என்று பல்வேறு கட்டங்கள் அதுப்பப்பெற்று ஆராய்ச்சிகள் நடைபெற்ற வரலாறு தெளிவாக்கப்பெறுகின்றது. இரஷ்யர்களும் அமெரிக்கர்களும்மாறிமாறி மேற்கொண்ட முயற்சிகள் எடுத்துக்காட்டப்பெறுகின்றன. இருவரும் விண்வெளிக்கு அனுப்பிய பல்வேறு துணைக்கோள்கள் (ஸ்புட்னிக்குகள்), லூனிக்குகள், எகிஸ்புளோரர்கள். வான் கார்டுகள், பயணியர்கள்) கொண்டு வந்த தகவல்கள் சுட்டப் பெறுகின்றன . இந்த நூல் தவத்திரு குன்றக்குடி அடிகளாருக்கு, செந்தமிழ்த்தாய் கலரடியை மறவாச் சீலர்; சீர்திருத்தக் கொடிவளர்க்கும் சீர்மை மிக்கார்; சந்தஇளம் பிறையணிந்த மூர்த்திக் கன்பர்; தயாமூல தத்துவத்தை நன்கு ணர்ந்தோர்; சிந்தனைக்கு விருந்தளிக்கும் பண்புச்செல்வர்; தேன்மொழியால் தமிழகத்திற் குயிர்அளிக்கும் அந்தணர்; நல் குன்றைநகர் வாழ வந்த அடிகளார்க் கிச்சிறுநூல் உரிய தாமே. என்ற பாடலால் அன்புப்படையலாக்கப்பெற்று ஆகஸ்டு 1964-இல் எனது பதினைந்தாவது நூலாக வெளி வந்தது: இது கழக வெளியீடு. இந்த நூலின் நூல்முகத்தில் அடிகளாரைப் பற்றி எழுதிய குறிப்பு இது: 'அறிவாலும் ஆற்றலாலும் அத்தனைக்கும் மேலாகச் செயலாற்றும் திறனாலும் என் உள்ளத்தைக் கவர்ந்தவர்கள்- தமிழ் கூறு நல்லுலகத் தின் தந்தை போன்றவர்கள்- தவத்திரு குன்றக்குடி