பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராக்கெட்டு நூல் உதயம் 225 அடிகளார். அடிகளார் சின்னப்பட்டமாக இருந்த காலத்தி லேயே வேண்டாத சில மடத்துச் சம்பிரதாயங்களைக் கைவிட்டதனால் பொது மக்கள் உள்ளத்தைக் கவர்ந்தவர் கள். எவருடனும் இன்முகத்துடன் பழகும் பண்புடையவர் கள்; பண்புடையார் பட்டுண்டு உலகம்’ என்ற வாய் மொழிக்கு எடுத்துக்காட்டாக நின்று நிலவுபவர்கள் பட்டம் ஏற்று மடத்துப் பொறுப்புகள் யாவும் அவர்களை வந்தடைந்த பிறகு பலதுறைகளிலும் அவர்களது அருள் நோக்கம் சென்றது: அறங்கள் யாவினும் புண்ணியங் கோடி ஆங்கோர் ஏழைக் கெழுத்தறிவித்தல்' என்பதை உணர்ந்து பல பள்ளிகளையும் இலவச உணவு விடுதிகளை யும் நிறுவினார்கள். 'பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான்-புவி, பேணி வளர்த்திடும் ஈசன்” என்பதை யுணர்ந்த அடிகள் ஆசிரியப் பயிற்சிப் பள்ளியைத் துவக்கி, :பெண்கள் அறிவை வளர்த்தால்-வையம். பேதைமை யற்றிடும் காணிர்' என்ற குறிக்கோளைப் பறையறை வித்தனர். தம் பார்வையின் கீழுள்ள திருக்கோயில்களைப் புதுக்கி அவற்றில் தமிழ் அருச்சனை வழிபாட்டைச் செயற்படுத்தினார்கள். இதனால் பாடிய் வாய் தேனூறும் "பால்வாய்ப் பசுந்தமிழ் ஏற்றம் பெற்றது. தமிழ் கூறு நல்லுலகமெல்லாம் அருள் நெறிக் கழகங்களைத் தோற்றுவித்துச் சமயப்பணி ஆற்றி வருகின்றார்கள். ஏனைய மடாதிபதிகள்போல் மூலவராக" இராமல், அடிகளார் உற்சவராக எங்கும் சென்று தமிழ் முழக்கம் செய்து சமயநெறியையும் தமிழ் நெறியையும் பரப்பி வருகின்றார்கள். ஆடிகளாரின் திருவாயினின்றும் அருவி போல் பொங்கி வரும் அமுத வெள்ளமாகிய பேச்சில் புலமை மணம் கமழும்; ஆராய்ச்சித் திறன் ஒளிரும்; சிந்தனைச் சுடர் தெறிக்கும். இவர்களுடைய கருத்துகளில் ஆழ்கடலைப் போன்ற ஆழமும் உண்டு; அதனைப்போல் அவை அகன்றும் காணப்பெறும். அனைத்தையும் துறந்து தமிழைத் துறக்க முடியாத அடிகளார் ஆசிரியர்களின் தி- 1.5