பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.26 நினைவுக் குமிழிகள்.4 தோன்றாத் துணையாக இருப்பவர்கள்; புலவர்களிடம் பெருமதிப்புக் கொண்டவர்கள். வருங்கால மானிடப் பயிர்கள்-மாணாக்கர்கள் - உய்யவேண்டும் எனத் துடித்து நிற்பவர்கள். தம்மிடம் சுரக்கும் அருள் காரணமாக இங்ங்ணிம் பல்லாற்றாற்றானும் சேவை புரிந்து வரும் தவத்திரு அடிகளார்மீது அடியேன் கொண்டுள்ள பேரன்பிற்கும் பெருமதிப்பிற்கும் அறிகுறியாக இச்சிறு நூலை அவர்கள் திருவடிகளில் அன்புப் படையலாக்கு கின்றேன். இவர்கள் ஆசியால் இந்நூல் தமிழ்கூறு நல்லுலகில் பெருமிதத்துடன் உலவும் என்பது என் திடமான நம்பிக்கை' பயனுடைய நல்ல நூல்கட்கு பரிசளித்து வரும் தமிழக அரசு இந்நூலுக்கு முதற்பரிசாக ரூ. 1000/- அளித்தது. இஃது அடிகளாரின் ஆசி என்பது என் கருத்து. இந்த நூலின் படியொன்றினை எடுத்துக் கொண்டு ஒரு விடுமுறைக் காலத்தில் குன்றக்குடி சென்று அடிகளாரைச் சந்தித்து அவர் திருவடிகளில் சேர்த்தேன். அவர் தமக்குப் படையலாக்கியதால் மகிழ்ந்ததை விட அறிவியல் வளர்ச்சியைக் காட்டும் ஒரு புதிய படைப்பைக் கண்டு என்னை மிகவும் பாராட்டினார்; விருந்தும் அளித்தார். விடைபெறுங்கால் ரூ 2001-க்கு ஒரு காசோலை வைக்கப் பெற்ற ஒரு காகித உறையையும் தந்து வாழ்த்துக் கூறினார். கல்லூரியில் சேரும் நிலையிலிருந்த என் முதல் மகனுக்கு ஒரு மிதிவண்டி வாங்கித் தருவதற்கு அத் தொகை உதவியது. இது காலத்தில் செய்த உதவி யாதலால் அதனை ஞாலத்திலும் பெரிதாகக் கொண்டு மகிழ்ந்தேன்.