பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமிழி 186 30. தமிழகப் புலவர் குழுவை வரவேற்க இயலாமை 1965.ു என்பதாக நினைவு. குடும்பம் காரைக்குடியில் இருந்த சமயம். ஒருநாள் நான் நூலகத்தி லிருந்து திரும்பியவுடன் திரு கி. ஆ. பெ. விசுவநாதன் என்ற பெயர் பொறிக்கப்பெற்ற வருகை அட்டை (Visiting Card) ஒன்று என் மேசையின் மீது இருந்தது. தமிழ்க் காவலர் வந்து போனதை அறிந்தேன். அந்த அட்டையில் தாம் தங்கியிருக்கும் இடத்தைக் குறிப்பிட் டிருப்பின் அங்கு சென்று பார்த்திருப்பேன். எந்தவிதக் குறிப்பும் இல்லாததைக கண்டு மிகவும் வருந்தினேன். அன்று மாலையில் தமிழ்ப்புலவர் குழு செப்டம்பர் தடுவில் வருவதாகவும். அவர்கள் கூட்டம் பல்கலைக் கழகத்தில் நடைபெறப் பொறுப்பு ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் கல்லூரி முதல்வரிடமிருந்து ஒரு குறிப்பு மாலை 3 மணிக்கு வந்தது. புலவர் குழுவரும் நாளைக் கவனித்த தில் அது செப்டம்பரில் வரும் 14 நாள் விடுமுறையின் நடுவில் அமைந்திருந்தது. குறிப்பைக் கண்டதும் அதனை எடுத்துக் கொண்டு முதல்வரைச் சந்தித்தேன். அப்போது முதல்வராக இருந்தவர் விலங்கியல்பேராசிரியர் டாக்டர் பம்பாபதிராவ், புலவர் குழு வரும் நாள் விடுமுறையின் நடுவில் வருவதாக வும் நான் ஆறு ஆண்டுகளாகக் குடும்பத்தை விட்டுத் தனிமையில் இருப்பதாகவும் குடும்ப நிலையைக் கவனிக்கவும் சிறுவர்களின் கல்வியைக் கவனிக்கவும் ஊர் செல்ல வேண்டியிருப்பதால் தன்னால் இப்பொறுப்பை