பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

感露蔚 நினைவுக் குமிழிகள்-4 ஏற்க இயலாதென்றும் விளக்கி என்னை இந்தப் பொறுப்பி லிருந்து நீக்கிவிடுமாறும் கேட்டுக் கொண்டேன். முதல்வர் சொன்னார்: "மிஸ்டர் ரெட்டியார், திருச்சியிலிருந்து ஒரு பெரியவர் துணைவேந்தரைச் சந்தித்தார். அவரை என்னிடம் அனுப்பி என்னைக் கொண்டு இந்த ஏற்பாட்டைச் செய்யுமாறு தொலைபேசி மூலம் செய்தி அனுப்பினார். இந்தக் குறிப்பு அவர் எண்ணமேயன்றி, என் விருப்பம் அன்று. நாளை அதிகாலையில் அவர் ஐதரபாத் செல்லுகின்றார். அவர் உங்கள் மீது நல்ல மதிப்பு வைத்திருக்கின்றார். இன்று மாலையே அவரைச் சந்தித்துப் பேசி உங்கள் நிலையைய விளக்கி இயலாமையைத் தெரிவித்து விட்டால், மாற்று ஏற்பாடு செய்து கொள்ளலாம். நீங்கள் அவரைப் பார்த்து அவர் கருத்தறிந்து என்னிடம் நாளை தெரிவியுங்கள்’’ என்றார். எனக்கு ஒரே குழப்பம். துணைவேந்தரைப் பார்க்க முயன்றேன். யாரோ அமைச்சர் ஒருவர் வந்திருப்பதாகவும் அவருடன் கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு ஒரு கூட்டத்திற்குப் போயிருப்பதாகவும், மாலை ஆறு மணிக்கு மேல்தான் சந்திக்க முடியும் என்றும் அவருடைய தனி அலுவலர் மூலம் அறிந்தேன். அறைக்கு வந்து மாலைக் கடன்களை முடித்துக் கொண்டு சிற்றுண்டி அருந்தி சுமார் ஆறரை மணிக்குப் புறப்பட்டேன். மிதி வண்டிதான் என் வாகனம் ஏழை கட்கு இதுவே அதிகப்படியானது. என் அறையிலிருந்து ஒரு நாளைக்கு இரண்டு முறை பல்கலைக் கழகத்திற்குப் போய் வந்தால் உயிர் போய், உயிர் வரும்:போகும் போது ஏற்றம், வரும்போது சிறிது இறக்கம். ஐம்பது அகவையை எட்டிய நிலையில் மிதிவண்டியை இயக்குவது கஷ்டமாகத் தான் இருந்தது. என்ன செய்வது? வேறு வழி இல்லை. மிகவும் கஷ்டத்துடன் மேல் மூச்சு வாங்க மாலை ஏழு. மணிக்குத் துணைவேந்தர் திரு மாளிகைக்கு வந்து சேர்ந்