பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/263

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகப் புலவர் குழுவை வரவேற்க இயலாமை 多瑟羡 தேன். துணைவேந்தர் ஒரு சிற்றுந்தின் முன் பக்கம் வண்டி யோட்டியின் இருக்கைக்கருகிலுள்ள இருக்கையில் அமர்ந்து கொண்டு எங்கோ போகத் தயாராக இருந்தார். என்னைக் கண்டதும் வண்டியோட்டி வேறு ஏதோ வேலையாக இல்லத்திற்குள் சென்றிருந்ததால் அவர் இருக்கையில் என்னை அமரச் செய்து பேசத் தொடங்கி னார். மிஸ்டர் ரெட்டியாா, இன்னும் சில நிமிடங்கள் தாமதித் து வந்திருந்தால் என்னைப் பார்த் திருக்க முடியாது. ஐதரபாத்திலிருந்து சில அமைச்சர்கள் வந்திருந் தமையால் வாகனங்கள் யாவும் அவர்கட்கு உதவச் சென்றுவிட்டன. இந்தச் சிற்றுந்து தான் மிச்சம். நல்ல வேளையாக இதுவாவது மிஞ்சியது எனக்கு. நானும் கால்நடை மருத்துவக் கல்லூரியில் நடைபெறும் விருந்தில் கலந்து கொள்ளத் தயாராக இருக்கின்றேன். (கைக் கடிகாரத்தைப் பார்த்து) மணி 7-தான்; 7 - 30க்கு அங்கு இருக்க வேண்டும். இவ்வளவு அவசரமாக இந்த அகாலத்தில் வந்த காரியம் என்ன? இன்னும் மூச்சு வாங்குகிறதே' என்று அன்புடனும் பரிவுடனும் வினவி <brm FF , நான் சொன்னேன் : ஐயா, மாலையில் முதல்வரிட மிருந்த ஒரு குறிப்பு வந்தது. அதில் செப்டம்பர் நடுவில் திரு கி. ஆ. பெ. விசுவநாதம் தலைமையில் திருப்பதிக்கு வரும் புலவர் குழுவை வரவேற்கவும். அவர்கள் நடத்த இருக்கும் கூட்டத்திற்கு ஏற்பாடுகள் செய்யவும் எனக்குப் பொறுப்புத் தருமாறு முதல்வரிடம் தொலைபேசி மூலம் சொன்னிர்களாம். நான் விடுமுறையில் குடும்பத்தைக் கவனிக்கக் காரைக் குடி செல்லவேண்டும் என்றும், விடுமுறை தொடங்குவதற்குமுன்னரோ அல்லதுவிடுமுறை முடிந்த பின்னரோ வந்தால் இப்பொறுப்பு ஏற்க வசதி யாக இருக்கும். என்றும் விடுமுறையின் நடுவில் வருவதால் என்னால் இப்பொறுப்பை ஏற்க இயலாது என்றும்