பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/264

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

雳恕鲸 நினைவுக் குமிழிகள்-சி சொல்லி விட்டேன். ஆனால் அவர் தங்களைப் பார்த்து இதனைச் சொல்ல வேண்டும் என்றும், நாளைக் காலையில் தாங்கள் ஐதரபாத் புறப்படுவதாகவும் அதனால் இன்றே. தங்களிடம் கூற வேண்டும் என்றும் சொன்னதால் உடனே வந்தேன். மன்னிக்க வேண்டும்' என்றேன். உடனே அவர் கேட்டார் : "இந்தக் கூட்டத்தில் படிப்பு சம்பந்தமாக ஏதேனும் பேசுவார்களா? அல்லது. சமூக விஷயமாக ஏதேனும் நடக்குமா?' என்று. நான் சொன்னேன் : அப்படி ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை, சமூக விஷயமாகத் தான் ஏதேனும் இருக்கும்போல் தோன்றுகின்றது. பண்டைக் காலத்தில் மதுரையிலிருந்த தமிழ்ச்சங்கத்தில் 49 புலவர்கள் இருந்த தாகச் சொல்லார்கள், அதை நாடெங்கும் காட்டு வதற்காக 49 புலவர்கள் கொண்ட குழு பல இடங்கட்கு. நடத்திச் செல்லப்படுகின்றது. சில சமயம் .நாட்டு நடப்பு களையும் பேசினாலும் பேசலாம்' என்று. இதைக் கேட்டதும் அவர் தேர்த் தட்டிலிருந்து கொண்டு கண்ணன் பார்த்தனுக்குக்கீதையை உபதேசித்தது. போல் பேசலானார். நான் அவர் அமர்ந்திருந்த இடத் திலும் அவர் நான் உட்கார்ந்த இடத்திலுமாக மாறி உட்கார்ந்து கொண்டால் உவமை முற்றுவமையாக அமையும். "மிஸ்டர் ரெட்டியார், இதற்காகவா அலட்டிக் கொண்டு இவ்வளவு தூரம் அகாலத்தில் சிரமப்பட்டு வந்தீர்கள்? ஒரு கால் தாளில் காரணத்தை எழுதி இயலாமையைக் காட்டிவிட்டு ஊருக்குச் செல்லுங்கள். முதல்வருக்கு ஏதாவது மாற்று ஏற்பாட்டிற்கு யோசனை கூறிச் செல்லுங்கள், இன்றிருந்து ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். பொது விஷயத்திற்கு அதிக மாக அலட்டிக் கொள்ளாதீர்கள். பொது விஷயத்தில் அக்கறை காட்ட வேண்டும் என்பது உண்மையே. ஒவ்வொருவரும் பொறுப்பைக் கழித்துவிட்டு இப்படி