பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/265

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகப் புலவர் குழுவை வரவேற்க இயலாமை 23 விலகிக் கொண்டால் பொதுக் காரியம் நடைபெறுவதில் குந்தகம் ஏற்பட்டுவிடும். பொதுக் காரியம் ஒருவரால் மட்டிலும் நடைபெற முடியாது; பலர் அதில் பங்கு கொள்ள வேண்டும். ஆனால் ஒரு நெருக்கடியான கட்டத்தில் ஒருவர் அவசிய நிமித்தம் இல்லாத நிலை ஏற்பட்டாலும் அக்காரியம் நடைபெற வேண்டும். நான் தான் இதில் முக்கியம்: நான் இல்லாவிடில் இது நடை பெற முடியாது’ என்ற தன் முனைப்பு கூடாது. பங்கு பெறும் ஒவ்வொருவரும் இதனை நன்கு உணர வேண்டும். புலவர் குழுவில் திரு விசுவநாதம் முக்கியமானவர்; அவர் இல்லாமல் இது நல்டபெற முடியாது. குழுவிலுள்ள 49 பேர்களில் ஓரிருவர் உடல் நலமின்றி, வேறு ஒரு முக்கிய மான காரணத்தால் கலந்து கொள்ள இயலாத நிலை ஏற்பட்டால் கூட்டத்தை நிறுத்த முடியுமா? முடியா தல்லவா? கூட்டம் நடைபெற்றே தீரும். நான் தான் இருக்கின்றேன் துணைவேந்தராக. இந்த நிருவாக இயந்திரத்தில் நான் வேக உருளை (Speed wheel) ஆகவும் உள்ளேன்; இயக்கும் பொறியாகவும் உள்ளேன். தான் இல்லாவிட்டால் பல்கலைக் கழகம் இயங்காது என்று நினைப்பது பூனை தான் கண் மூடிக் கொண்டால் பூலோகமே இருட்டாக இருக்கும் என்று நினைத்துக் கொள்வது போல என்றாகிவிடும். நான் ஒரு மாதம் வெளி யில் செல்கின்றேன் என்று வைத்துக் கொள்ளுங்கள்,மூன்று உள்ளுர் ஆட்சிக் குழு உறுப்பினர்கள் முக்கியமான விஷயத்தை முடிவு செய்ய நிர்வாகம் இயங்கும். கொள்கை யளவில் இல்லாத சாதாரண விஷயங்களைப் பதிவாளர் கவனித்துக் கொள்வார். நிருவாக இயந்திரத்தில் துணைவேந்தரைப் போல் ஒவ்வொருவரும் முக்கியமானவர்கள். கடைநிலை ஊழியர் ஒருவர் இல்லாவிட்டாலும் நிருவாகம் இயக்கத்தில் சிறிது தாமதப்படத்தான் செய்யும். பொது விஷயத்தில் யாரும்