பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/266

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

233 நினைவுக் குமிழிகள்-4 அதிகமாக அலட்டிக் கொள்ளக் கூடாது. அப்படி அலட்டிக் கொண்டால் அவர்கள் மனநிலை கெடும்; உடல் நிலையும் பாதிக்கப்படும். உங்கள் பெண் திருமணம், பையன் திருமணம் என்றால் அலட்டிக் கொள்ள வேண்டியது தான். ஏனெனில் அதில் உங்கள் பங்கு இன்றியமையாதது. துறை நிகழ்ச்சியாக இருந்தால் அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை. நீங்கள் இல்லாத நிலை ஏற்பட்டாலும் துறை இயங்கச் செய்யும். திறமையுடன் இயங்கலாம்: அல்லது இயங்காமற் போகலாம். ஆனால் நின்றுவிடாது' என்று கூறி முடித்தவர், தன் கைக்கடிகாரத்தைப் பார்த்து 'மணி 7-30 ஆகிறது. நானும் விருந்துக்குப் போக வேண்டும். நீங்கள் அமைதியாக விடுமுறையில் ஊருக்குப் போகலாம்' என்று விடை கொடுத்தார். அடுத்த நாள் முதல்வரைப் பார்த்து 'தெலுங்குத் துறைக்கு இப்பொறுப்பு விடலாம். தெலுங்குத் துறை தமிழ் புலவர் குழுவை வரவேற்றால் அஃது இன்னும் சிறப்பாக அமையும். நானும் திரு. ஜி. என். ரெட்டி, திரு ஜே. சென்னா ரெட்டி ஆகியவர்களிடம் பேசு கின்றேன்' என்றேன். முதல்வரும் இந்த மாற்று ஏற்பாட்டிற்கு ஒப்புக் கொண்டார். நானும் தெலுங்குத் துறையினரைப் பார்த்து ஆவன செய்யுமாறு கேட்டுக் கொண்டேன். அவர்களும் ஜமாய்த்து விடுகின்றோம்.' என்று உற்சாகமாகப் பேசினார்கள். விடுமுறை கழித்துத் திரும்பியவுடன் அவர்கட்கு நன்றி கூறத் தெலுங்குத் துறைக்குச் சென்றேன். நன்றாக நடைபெற்று விட்டது' என்று மகிழ்ச்சி தெரிவித்தார்கள். திரு. சென்னாரெட்டி மட்டும் சொன்னார். யாரோ ஒரு புலவர் பேசும்போது "திருப்பதி தமிழகத்திற்கு உரியது" என்ற தொனியில் பேசத் தொடங்கினார் திரு விசுவநாதம் அவர் பேச்சை அடக்கிவிட்டார். "நாங்கள் விருந்தினர் &శ}శi? வரவேற்றுமரியாதை செய்ய ஒப்புக் கொண்டோமே