பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/267

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகப் புலவர் குழுவை வரவேற்க இயலாமை 23.3 யன்றி பட்டி மன்றம் அமைக்க அல்ல' என்பதை அறியாமல் பேசியதுதான் சிறிது வருத்தத்தைத் தந்தது. விருந்தினர்கள் மனம் புண்படக்கூடாது என்று எங்களில் எவர் ஒருவரும் திருப்பதி பிரச்சினை குறித்து வாயெடுக்க வில்லை. எங்கட்குப் பேசத் தெரியாது என்பதல்ல’’ என்று கூறிமுடித்தார். நானும் ஏதோ சமாதானம் கூறினேன்; அதற்குமேல் பேச விரும் புவில்லை. குமிழி-187 31. நமது உடல் நூல் வெளியீடு உயர்நிலைப்பள்ளிக் கல்வி ஏற்பாட்டில் பொது அறிவியல் (General Science) ஒரு பாடமாக உள்ளது அப்பாடத்திட்டத்தில் உடலைப்பற்றி ஒவ்வொரு வகுப்பி லும் சில பகுதிகள் சேர்க்கப் பெற்றுள்ளன. ஆறாண்டுகள் படித்துத் தேர்ந்த பிறகும் பெரும் பாலோருக்கு உடலைப்பற்றி அடிப்படையில் முழுமை 。リJfr@r அறிவு இருப்பதில்லை. பொது அறிவியல் கற்பிப் போருக்கும் எல்லாப்பகுதிகளையும் நன்கு கற்பிப்ப தில்லை; பெரும்பாலோருக்கு எல்லாத்துறைகளிலும் நல்ல அறிவு இல்லாமையாலும், போதுமான பாடத்தயாரிப்பு செய்யாமையாலும் இந்நிலைமை ஏற்படுகின்றது. ஒரு மிதிவண்டி பழுது பார்ப்பவனுக்கு மிதிவண்டி யிலுள்ள எல்லாப்பகுதிக்ளும் நன்கு தெரியும். இங்ங்னமே பிற வாகனங்களைப் பழுது பார்ப்போருக்கும் அந்தந்த வாகனங்களைப் பற்றிய விவரங்கள் ! அவை இயங்குவது பற்றிய துணுக்கங்கள் எல்லாம் நன்கு தெரியும். ஆனால் உடலுக்கு ஏற்படும் ஊறுபாடுகளைப்பற்றி இவர்கட்கு