பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/268

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

荔参 நினைவுக் குமிழிகள்-4 ஒன்றுந் தெரியாது. நமக்கு ஆண்டவன் அருளிய உடலைப் பற்றித் தெரிந்து கொள்ளாதிருத்தல் மிகவும் வருந்தத் தக்கது . உடலின் உறுதி உடையவரே உலகில் இன்பம் உடையவராம்: இடமும் பொருளும் நோயாளிக்கு இனிய வாழ்வு தந்திடுமோ?" என்ற கவிமணியின் வாக்கு சிந்திக்கத் தக்கது. இந்த உலகில் இவ்வுடல் வாழ்க்கையைச் செவ்வனே கொண்டு செலுத்துவதற்கு வேண்டிய கருவி கரணங்கள் யாவும் நாம் பிறக்கும்பொழுதே இவ்வுடலில் அமைத் துள்ளன. இதயம், இரத்தம், மூளை, நரம்புகள், துரை ஈரல்கள், இரைப்பை, சிறு நீரகங்கள், கல்விரல் போன்றவையாவும் இந்த உடலின் பயணத்திற்குத் தேவையான உறுப்புகளாகும். உயிர்நிலையான இவ்வுறுப்பு கள் யாவும் சரியான நிலையிலிருப்பின் சாதாரணத். தேவைக் கேற்றவாறும், எதிர்பாராது ஏற்படும் தேவைக் கேற்றவாறும் வியத்தகு முறையில் இவை செயற்படும், நம் பிறப்புடன் நாம் பெற்றுள்ள இந்த இயற்கைத் "தளவாடங்களை"க் கையாளும் முறையைச் சரியாக, அறிந்து கொள்வோமாயின் நம்முடைய உடல் பயணம் இனிதாகச் செல்லும். இது கருதியே தெய்வத் திரு மூவரும், உடம்பார் அழியில் உயிரார் அழிவர் திடப்பட மெய்ஞ்ஞானம் சேரயும் மாட்டார் உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர்ை வளர்த்தே தேனே? 1. கவிமணி : மலரும் மாலையும்-உடல் நலம் பேனால்-1 2. திருமந்திரம்-724.