பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/269

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'நமது உடல்’ நூல் வெளியீடு 33器 என்று காயசித்தி உபாயத்தை"த் தெளிவாக உரைப்பர். மேலும் இந்த ஞானச் செல்வர், உடம்புளே உத்தமன் கோயில்கொண் டான் என்று உடம்பினை யானிருந் தோம்புகின் றேனே" என்று உடலோம்பலின் இன்றியமையாமையை வற் புறுத்திச் செல்வர். சமயப் பெருமக்கள் ஆலயங்களின் அமைப்பு முறை மானிட சரீரம் என்னும் ஆலயத்தின் புறச்சின்னங்கள் என்று கூறுவர். மானிட சரீரமே ஆலயங்களுள் மிகச் சிறந்தது என்று ஆன்றோாகளால் எல்லாக் காலத்திலும் அங்கீகரிக்கப் பெற்றுள்ளது. அண்டமெங்கும் குடி கொண் டிருக்கும் இறைவன் சிறப்பாக மானிட உடலில் வீற்றிருக் கின்றான் என்பது சமயக் கோட்பாடு, பல்வேறு முறையில் பயன்படும் உறுப்புகளடங்கிய இவ்வுடலைப்பற்றி உயர் நிலைப் பள்ளி வரையில் கல்வி கற்றவர்களும் அங்ங்னம் கல்லாது தமிழறிவு மட்டிலும் பெற்ற மற்றவர்களும் எளியமுறையில் அறிந்து கொள்வதற்கேற்றவாறு தமிழ் மொழியில் தக்க முறையில் அமைந்த உடலைப் பற்றிய நூல்கள் இல்லை. இந்தக் குறையைப் போக்கும் பணியில் ஈடுபட்டு ஒர் அழகிய நூலை எழுதத் துணிந்தேன். 'கமது உடல்" என்ற தலைப்பில் 64 விளக்கப் படங்களுடன் நூல் ஒன்று உருப்பெற்றது. இதில் உறுப்புகளின் துணையால் உடல் இயக்கம் தெளிவாக்கப் பெற்றுள்ளது. இத்தகைய பணியை ஒரு தெய்வப் பணியாகவே கருதுவேன். இந்த நூலை நம் கண் காணும் விவேகாநந்தராகிய தவத்திரு சித்பவானந்த அடிகளுக்கு அன்புப் படையலாக்க நினைத்து திருப்பாராய்த்துறை இராமகிருஷ்ண தபோ 3 டிெ. 725