பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/270

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

然岛岱、 நினைவுக் குமிழிகள்-4 வனத்தில் அடிகளாரின் பிரதம சீடராகிய சாந்தானந்தா' ('பூர்வாசிரமம் இராமுடு என்ற பெயருடையவர்') என்பவருக்கு எழுதி அடிகளாரின் ஒளிப்படத்தை அனுப்புமாறு கேட்டிருந்தேன். சாந்தானந்தா இக் குறிப்பை அடிகளாரிடம் தெரிவிக்கவே, அவரும் விவேகாநந்த அடிகட்குப் படைக்குமாறு பணித்ததாகக் கடிதம் வந்தது; தம் படம் தருவதற்கு இசையவில்லை. நானும் என் கண் கண்ட விவேகாநந்தர் தவத்திரு சித்பவாநந்தரே என்று தெரிவித்து அவருக்கே படைப்ப தாக எழுதிவிட்டேன். சில நாட்களில், வங்கநாடு ஈன்ற நரேந்திரன் கண்ட மாண்புறு கற்பனை வித்தைத் துரங்கமார் கல்விச் சாலைகள் மலிந்த தூயநல் தபோவன மாக்கிப் பொங்கிய ஞானத் தீங்கனி தந்து புவியெலாம் நுகர்ந்திடச் செய்த எங்கள்மா முனிவர் சித்பவா நந்தர்க் கிச்சிறு நூலுரித் தாமால் என்ற பாடலின் மூலம் அடிகளாருக்கே அன்புப் படையலாக்கி முதற் படியை அவர் திருவடிகளில் சமர்ப்பிக்குமாறு சாந்தாநந்தாவுக்கு அனுப்பி வைத்தேன். இந்த நூல் என்னுடைய பதினெட்டாவது வெளியீடாகும். (சனவரி 1966) இந்த நூலில் தவத் திரு அடிகளாரைப் பற்றி நான் வைத்த குறிப்பு: தமிழ்கறு நல்லுலகில் தவத் திரு சித்பவாகக் த அடிகளை அறியாதவர் இரார். கடந்த முப்பது ஆண்டுகட்கு மேலாகத் திருச்சிராப்பள்ளிக்கு 4. இவர் இப்பொழுது (ஏப்ரல்-1990 இல்லை. சில ஆண்டுகட்கு முன்னர் இறைவன் திருவடியை நிலை அடைந்தார்.