பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/271

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'நமது உடல்’ நூல் வெளியீடு 爵、亨 அண்மையில் சற்றேறக் குறைய பத்துக் கல் தொலைவி லுள்ள திருப்பராய்த்துறையில் இராமகிருஷ்ணதபோவனம், விவேகாநந்த வித்யாவனம் என்ற இரண்டு தாபனங்களை நிறுவி முறையே சமயப் பணியும் கல்விப் பணியும் புரிந்து வரும் தவச் செல்வர் இவர்; தம் பேச்சாலும் எழுத்தாலும் இப்பணிகளை மேலும் மேலும் துலக்கமும் விளக்கமும் அடையச் செய்து வரும் அருட்செம்மல் இன்றுள்ளார் கண் காணும் சுவாமி விவேகாநந்தர்" . அந்த அடிகளாரின் மறுபிறவியே இந்த அடிகளார் என்று கூறினும் சாலப் பொருந்தும். கடந்த இருபத்தைந்து யாண்டுகட்கு முன்ப தாகவே என் உள்ளத்தைக் கவர்ந்து என்னையும் ஒர் அடியனாக ஆட்கொண்ட பெருமான் இவர். இவருடைய அருள் நோக்கு சிறியேனது வாழ்க்கையினைப் புனிதமாக்கி வருகின்றது என்பது என் திடமான நம்பிக்கை. இவருடைய ஆசியால் என்னுடைய எழுத்துப் பணியும் கல்விப் பணியும் சிறக்கவேண்டும் என்பது என் பேரவா, இத்தகைய பெருந்தவச் செல்வருடைய திருவடிகளிலே இந்த நூலை அன்புடன் படைக்கின்றேன். இவருடைய ஆசியால் இந்நூலைப் படிக்கும் சிறார்கள் முதலியோ ருடைய வாழ்க்கையும் புனிதமாகும் என்பது என்னுடைய திடமான நம்பிக்கை.' இவருடைய ஆசியால் இந்நூல் தமிழக அரசின் இரண்டாவது பரிசு ரூ 500/- பெற்றது. துறவிகட்குப் படைத்த இரு நூல்களும்" பரிசு பெற்றமை என்னைச் சிந்திக்க வைக்கின்றது. சித்பவானந்த அடிகள் இன்று நம்மிடையே இல்லை. நவம்பர் 19 நாள்-1985 இறைவன் இணையடிகளை அடைந்து விட்டார். அவர் பிரிவு என்னை மிகவும் வருத்தியது. 1943-லிருந்து என்னை ஆசிகள் கூறி அணைத்துக் கொண்டவர் அல்லவா? 5. தவத்திரு குன்றக்குடி அடிகட்கு அன்புப் படையலாக்கிய இராக் கெட்டுகள் முதல்வரிசு பெற்றமை ஈண்டு நினைவு கூரத்தக்கது.