பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமிழி-188 32 குடும்பத்துடன் திருப்பதியில் குடியேறல் 1966-game, விடுமுறையில் காரைக்குடி புது நகரத்திற்கு (New Town) அருகிலுள்ள நூறு குறுக்கம் என்ற இடத்தில் அடுத்தடுத்துள்ள இரண்டு மனைகளை ரூ. 4500/-க்கு வாங்கினேன். அதே ஆண்டு டிசம்பர் மாதம் ரூ 16000/-க்கு இலக்குமிபுர அக்கிரகாரத்தில் கெட்டி வீடு ஒன்று வாங்கினேன். 1966-மே மாதம் குடும்பத்தைத். திருப்பதிக்கு மாற்ற வேண்டும் என்று தீர்மானித்தேன். முதல் மகன் இராமலிங்கம் P.U.C. முடித்திருந்தான். இரண்டாவது மகன் இராமகிருஷ்ணன் மூன்றாவது படிவம் முடித்திருந்தான். இராமலிங்கத்தை பி.எஸ் சி (கணிதம், இயற்பியல், வேதியியல்) வகுப்பில் சேர்க்க முடிவு செய்தேன். பொறியியல் கல்லூரியில் சேர்க்க வேண்டும் என்ற முயற்சியைக் கை விட்டேன்-கணிதத்தில் 60% இல்லாததால். இந்த விழுக்காடு மதிப்பெண் பெற்றிருந்தால் காரைக்குடி அழகப்பர் பொறியியல் சல்லூரியில் கம்பன் அடிப்பொடியின் அருளால் ஓரிடம் கிடைத்திருக்கும்; அதற்கு ஊழ் இல்லை. இராமகிருஷ்ணன் தமிழைப் பாடமொழியாகக் கொண்டு படித்தமையால், தவத்திரு சித்பவாநந்தர் அடிகள் யோசனைப்படி சென்னை தியாகநகர் இராமகிருஷ்ணர் உயர்நிலைப் பள்ளியிலும் அதன் மாணவர் விடுதியிலும் சேர்க்கத் திட்டம் இட்டிருந்தேன். திடீரென்று அவனுக்கு உடல் நிலை கெட்டதால் அதற்குரிய நுழைவுத்தேர்வு எழுத முடியாமல்போயிற்று: ஆதலால் இத்திட்டம் கைவிடப் பட்டது.