பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/273

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடும்பத்துடன் திருப்பதியில் குடியேறல் 荔9 جمعی-بمییاب بع திருப்பதியில் 1964-65இல் மைய அரசின் கீழ் இயங்கும் உயர்நிலைப் பள்ளி திறக்கப் பெற்றுக் கபில தீர்த்த சாலையில் திருமலை-திருப்பதி தேவஸ்தானக் கட்டடத்தில் இயங்கி வந்தது; இதில் ஆங்கிலம் பாட மொழியாக இருந்தது; வடமொழி, இந்தி கட்டாயப் பாடங்கள். இராமகிருஷ்ணன் காரைக்குடியிலேயே இந்தி மத்தியமா தேர்வு பெற்றிருந்தமையால் அதில் சிரமம் இல்லை. வடமொழி மட்டிலும் படிக்க வேண்டும். இதனால் இரண்டு திங்கள் (ஏப்பிரல் மே 66) மீனாட்சிசுந்தரேசுவரர் உயர் நிலைப் பள்ளி வடமொழி ஆசிரியர் செள மிய நாராயண அய்யங்கார் அவர்களிடம் தனிப் பயிற்சி பெறச் செய்தேன்; இரண்டு மாதத்திற்கும் ரூ 50| சிரமப் படியாகத் தந்ததாக நினைவு. ஏற்கெனவே இந்தி படித்திருந்ததால் வடமொழிப் பிடிப்பு விரைவாக ஏற்பட்டுவிட்டது. திருப்பதியில் மைய அரசுப் பள்ளியில் நுழைவுத் தேர்வு எழுத வேண்டியிருந்ததால் இந்த ஏற்பாடு செய்ய வேண்டியதாயிற்று. தவத்திரு சித்பவா நந்த அடிகள் 'ரெட்டியார் எங்கும் சரி வராவிடில் பையனை உங்கள் ஆதரவில் வைத்துக் கொண்டு பயிற்று வது மேல். உங்களுக்குத்தான் எல்லாப் பாடங்களையும் கற்பிக்கத் தெரியுமே' என்றும் சொல்லியிருந்தார்கள். 1966-மே மாதம் முதல் வாரத்தில் எதிர்பாராத வண்ணம் நோய் வாய்ப்பட்டான் இராமகிருஷ்ணன் , வலது முழங்காலில் தாங்க முடியாத வலி ஏற்பட்டது: ஒரு வாரம் துடிதுடித்துப் போனான். டாக்டர் P.K. நாராயண அய்யரிடம் காட்டினேன். அவர் சோதனை செய்து இதய நோய் என்று கண்டறிந்து அதற்கு சிகிச்சை செய்து கொண்டிருந்தார். திருப்பதிப் பயணம் நெருங்கி வரத்தொடங்கியது; இன்னும் பத்து நாட்கள்தாம் இருந்தன. கால் வலியோ தாங்க முடிய வில்லை. அறுவை சிகிச்சை செய்து பார்க்கலாம் என்று தீர்மானித்தார். ஒரு குறிப்பிட்ட நாளில் அறுவைக்கு