பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/274

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*霍参 நினைவுக் குமிழிகள்வதி ஆயத்தம் செய்யப் பெற்றது. மரத்துப் போகும் ஊசி போட்டு வலியின் றிதான் செய்தார். பையன் அறையி விருந்து நாயனா, நாயனா' என்று கதறியது இன்னும் என் மனத்தில் பசுமையாக உள்ளது. அறுவை சிகிச்சை யில் கில் நிறத்தில் குருதி கொட்டியது. டாக்டரே வியந்து போய் இப்படிப்பட்ட நோயைக் கனடதில்லை' என்று கூறினார். சிகிச்சை முடிந்து கட்டுப் போட்டதும் கால் வலி அறவே நீங்கியது: அறுத்ததால் உண்டான வலி சிறிது இருந்தது. நான்கு நாள் கட்டுப் போட்டார். ..இனி அஞ்ச வேண்டியதில்லை. பயணம் தொடங்கலாம். திருப்பதி சென்றபின் ஒரு நான்கு நாள் கட்டுப் போட்டார். போதும்' என்று சொல்லி விட்டார். பத்து நாட்களுக்கு மேல் குதிரை வண்டியில் மருத்துவ மனைக்குப் போய். வரவேண்டியிருந்தது. பையனை வண்டியில் தூக்கித்தான் உட்கார வைக்க வேண்டும். ஒரு லாரி அமர்த்தி பெரும்பாலான சாமான்களை புதிதாக வாங்கிய வீட்டின் மாடி அறையிலும், கீழேயுள்ள ஒர் அறையிலுமாகப் போட்டு விட்டேன். இந்த இரண்டு. அறைகள் போக மீதியுள்ள இடத்தில் ஒரு குடும்பம் தாராளமாக இருக்கலாம். இப்பகுதியை ரூ 45/வாடகைக்கு விட்டேன். பதினைந்து ஆண்டுகள் வீடு வாடகையில் இருந்தது; பயிற்சிக் கல்லூரிப் பணியாள் ஆறுமுகம் பிள்ளையின் பொறுப்பில் (மேற்பார்வையில்) விட்டிருந்தேன்; வாடகையை வாங்கி மதுரை வங்கியில் போடுமாறு ஏற்பாடு செய்திருந்தேன். காரைக்குடியில் கொடுக்கல் வாங்கல் கணக்குகள் இருந்ததால், யு.கோ. வங்கி, மதுரை வங்கி, இந்தியன் ஒவர் சீஸ் வங்கி இவற்றில் சேமிப்புக் கணக்குகளும் நிலையான டெபாசிட்டுகளும் இருந்து வந்தன. தனியார்களிடமும் புரோ நோட்டுக் கணக்குகள் இருந்து வந்தன.