பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/275

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடும்பத்துடன் திருப்பதியில் குடியேறல் 24. I திருப்பதி வாழ்க்கைக்குத் தேவையான 4 மெத்தைகள், சமையலுக்கு வேண்டிய தட்டு முட்டு சாமான்கள் இவற்றை மூன்று நான்கு மூட்டைகளாக நன்கு கட்டி நான் பயணம் செய்த இருப்பூர்தி வண்டியிலேயே ஏற்றி விட்டேன்; அதற்குரிய கட்டணத்தையும் செலுத்தி விட்டேன். விழுப்புரத்தில் வண்டி மாறும்போது இருப்பூர்தி நிர்வாகப் பொறுப்பில் சாமான்களும் மாறும் வண்டியில் ஏற்றப் பெறும். எல்லா ஆடைகளையும் இரண்டு பெரிய பெட்டிகளில் அடைத்து அனுப்பி விட்டேன். சில ஆடைகளைப் படுக்கைக்குள்ளும் வைத்துக் கட்டியிருந்தேன். தேவஸ்தான சத்திரத்தில் தினம் ரூ. 51. வாடகையில் ஒரு பெரிய அறையை வாங்கிக் கொண்டேன். நாள் தோறும் முதல் வேலையாக சத்திரத்திலுள்ள மருத்துவமனையில் புண்ணைத் துய்மை செய்து கட்டு போடும் பொறுப்பை மேற்கொண்டேன். இரண்டு நாட்கள் அலர்மேல் மங்காபுரத்திலுள்ள தாயார் சந்நிதி கோவிந்தராஜ சுவாமி சந்நிதி, இராமர் கோயில் சந்நிதி, கபில தீர்த்தம் இங்கெல்லாம் காலை நேரங்களில் சென்று சேவிப்பதும், பகலுணவிற்குப் பிறகு சிறிது ஒய்வு கொள்வதும், மாலை நேரங்களில் வீடு தேடுவதுமாக பத்து நாட்கள் கழிந்தன. இடையில் இரண்டு நாட்கள் திருமலை சென்று வேங்கடவனைச் சேவித்தோம். ஆகாய கங்கை, பாபநாசம், கோகர்ப்பம் முதலிய இடங்களுக்குச் சென்று வந்தோம். என் மனைவிக்கும் சிறார்கட்கும் இது முதல் முறைப் பயணமாதலால் இதனை நன்கு மகிழ்ச்சி யுடன் அதுபவித்தனர். மலையில் இரண்டு நாட்கள் தங்கி யிருந்தோம். மலை மேலும் கீழும் தங்கியிருந்த காலத்தில் சிற்றுண்டி, பகல் உணவு முதலியவை உணவு விடுதிகளில் தான் கொண்டோம். ஒரு வாரத்திற்குள் வீடு கிடைத்தது. மத்திய அரசுப் பள்ளியின் எதிரிலேயே ஒரு வீடு அமைந்தது. ரூ.30/ தி-16