பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/276

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

343 நினைவுக் குமிழிகள்-4 மாத வாடகை ரூ.101. தண்ணீர்க் கட்டணம். தண்ணிர் குழாய்மூலம் வினியோகிக்க ஏற்பாடு செய்யப் பெற்றிருந்தது. சமையல் அறை, உணவு உண்ணும் அறை, குளியல் அறை, கழிப்பறை, படுக்கையறைகள், வேறு இரண்டு அறைகள் தனித்தனியாக இருந்தன: புழக்கடை யில்தான் வெந்நீர் போட்டுக் கொள்ள ஏற்பாடு செய்து கொண்டோம். விறகு அடுப்புதான். திருப்பதியில் கியாஸ் அடுப்பு அப்போது இல்லை. நான்கு ஆண்டுகள் இந்த இல்லத்தில் தங்கியிருந்தோம். இதன் உரிமையாளர் திரு உமாமகேசுவரெட்டி மிகவும் நல்லவர்; நன்றாகப் பழகுவார். குறைபாடுகளைத் தெரிவித்தால் உடனே நீக்குவார். இந்த இல்லத்தில் இருந்தபோது . மூத்தவன் இராமலிங்கம் பி.எஸ்.சி. டிகிரி படிப்பை முடித்துக் கொண்டான் இளையவன் இராமகிருஷ்ணன் எட்டு ஒன்பது. பத்து வகுப்புகளை முடித்துக் கொண்டு தனியாக மெட்ரிகுலேஷன் படித்து வெற்றியடைந்தான். இது பற்றிய விவரங்கள் ஒரு தனிக் குமிழியில் காட்டப் பெற்றுள்ளன. குமிழி-189 33. இராமலிங்கம் இவன் என் முதல் மகன். பள்ளியிறுதித் தேர்வுக் குரிய ஆண்டில் (11-வது வகுப்பு: 6-ஆம் படிவம்) பயிலும் போதுதான் இவனைக் கவனிப்பதற்கு திரு R. செளந்திர ராஜ அய்யங்கார் என்ற அறிவியல் ஆசிரியரை ஏற்பாடு செய்திருந்தேன். மாதம் ஒன்றுக்குச் சிரம தானமாக ரூ.30/- தந்ததாக நினைவு. பத்து வயதிலிருந்து இருபது வயது வரை மாணாக்கர்களை நன்கு கவனிப்பது மிகவும் இன்றியமையாதது. குழுவாகக் கூடி ஊர் சுற்றுவான்.