பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/277

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடும்பத்துடன் திருப்பதியில் குடியேறல் 243 இந்த வயதில் எழும் பல்வேறு உணர்ச்சிகளை மடை மாற்றம் செய்து பயனுள்ள முறையில் திருப்பாவிடில் பிள்ளைகள் குட்டிச் சுவர்களாகி விடுவார்கள். படிப்புச் சூழ்நிலையாவது இருக்கட்டும் என்றுதான் தனிப்பயிற்சிக்கு ஏற்பாடு செய்திருந்தேன். தனிப் பயிற்சி பொறுப்புள்ள ஆசிரியர்கள் வீட்டிலேயே ஒரு சிறு பள்ளி வைத்திருப்பார் கள். எல்லோரையும் நன்கு கவனிக்க முடியாத நிலையும் உருவாகும். மாணாக்கர்களிடம் எந்தப் பாடத்தில் அறிவு போதாது என்பதைத் தெரிந்து கொண்டு அக் குறையை நீக்கினால் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம்" மாணாக்கர்களிடமே நாம் முதலாவதாகத் தேற வேண்டும் என்ற உந்து விசை இருந்தால்தான் ஆசிரியர் கவனிப்புக்குப் பொருள் உண்டு, இஃது இல்லாவிடில் கழுதைகளைக் கட்டி ஹோமம் வளர்ப்பது போலாகும். இராமலிங்கத்திடம் நான் நினைத்த அளவுக்கு இந்த உந்து விசை சரியாக அமையவில்லை என்பதை பல நிகழ்ச்சிகளால் நான் கணித்திருந்தேன். சிறுவயதிலேயே தட்சிண பாரத இந்தி பிரச்சார சபையினர் நடத்தும் இந்தித் தேர்வுகளில் முதல் மூன்று தேர்வுகளிலாவது தேறியிருந்தால் இந்த அறிவு பணி யாற்றும் இடத்திற்கேற்ப எய்ப்பினில் வைப்பாகப் பயன் படும் என்று இரு சிறுவர்களையும் இந்தித் தனிப்பயிற்சிக்கு ஏற்பாடு செய்திருந்தேன். இராமலிங்கம் மூன்று தேர்வு களில் வெற்றி பெற்றான்; இராமகிருஷ்ணன் இரண்டு தேர்வுகளில்தான் வெற்றி பெற முடிந்தது. திருப்பதிக்குக் குடும்பம் மாறியதால் மூன்றாவது தேர்வுக்கு முயல வில்லை. இராமலிங்கம் 'மத்யமா என்ற இரண்டாவது தேர்வில் தேறவில்லை. இதில் தேர்ச்சியடையாமல் மூன்றாவது தேர்வு எழுத முடியாது. முதல் தேர்வு எழுதாமலேயே இரண்டாவது தேர்வுக்கு உட்காரலாம்; இரண்டாவது தேர்வில் தேறாத நிலையை இரகசியமாக வைத்துக் கொண்டு பயிற்சி தரும் ஆசிரியரை மாற்றிக்