பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/278

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 நினைவுக் குமிழிகள்-4 கொண்டான். அவரிடமும் தான் தேர்ச்சி பெறாமையைத் தெரிவிக்கவில்லை. தேர்வுக்குப் பணம் செலுத்தப்பட்டு விட்டது. தேர்வு நெருங்கிய சமயம்தான் தேர்வு எழுத முடியாது என்பதை அறிந்து கொண்டான். தேவ கோட்டையில் தேர்வு எழுத வேண்டும். இரண்டு நாட்கள் செலவுக்கு பணம் தந்து அனுப்பினேன்; தேர்வுக்குப் போய் வந்ததாகவும் நன்றாக எழுதியதாகவும் சொன்னான். இது நாடகம் என்பது பின்னால் தெரிய வந்தது. 'கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளில் தெரிந்து விடும்" என்ற பழமொழி இத்தகைய நிகழ்ச்சிகளால் திரண்ட நவநீதம் அல்லவா? திரும்பவும் முதல் ஆசிரியரிடமே படிக்க ஏற்பாடு செய்து இரண்டு தேர்வு களிலும் இரண்டு, மூன்று) வெற்றி பெற்றான். பள்ளியிறுதித் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தான். நான் நினைத்த அளவுக்குப் பெற வில்லை. காரணம் வெளிப்படை. படிப்பில் கவனம் இல்லாது ஊர் சுற்றியிருக்கின்றான். P.U.C.யிலாவது நன்கு படித்து நல்ல மதிப் பெண்கள் பெறலாம் என்று நினைத்து அதற்கேற்ப ஏற்பாடுகளைச் செய்தேன். அவை யும் பயன்படவில்லை. விசுவநாதன் என்பவர் அழகப்பா கலைக் கல்லூரி கணித ஆசிரியர். அவர் வகுப்பு நடத்து வதில் திறமையற்றவர் என்பதாகவும், ஆனால் தனிப் பயிற்சி தருவதில் வல்லவர் என்றும் கேள்விப்பட்டதுண்டு. என் தோழ ஆசிரியர்திரு. கிருஷ்ண அய்யங்கார்மூலம்.அவரை என் மகன் இராமலிங்கத்திற்குத் தனிப்பயிற்சி தருவதற்கு ஏற்பாடு செய்திருந்தேன். வாரத்தில் மூன்று நாள் (நாளொன்றுக்கு ஒரு மணி நேரம்) கவனிக்க வேண்டும்; ரூ.200/- சிரம தானம். ஆண்டு இறுதியில் (கோடை விடுமுறையில்) அவருக்குத் தொகை வழங்குவதற்காக அவர் இல்லம் சென்று ரூ.200/- தந்தேன். இரண்டு நாட்கள்தாம் வந்தான்; அதற்கு மேல் வரவே இல்லை; இதற்கா பணம்?' என்றார். பேசியபடி கொண்டு