பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/279

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராமலிங்கம் 245 வந்தேன்' என்றேன். இந்நிலையில் வாங்கமாட்டார் என்று நினைத்தேன். வாங்கிக் கொண்டார். "சிரமம் இல்லாமல் வாங்கிக் கொண்டார் போலும்! என்று கருதினேன். தானம் வாங்கும் பிராமணர் அல்லவா? பின்னர் அவர் குடும்ப நிலை சரி இல்லை என்றும், மனைவி யுடன் ஒத்து வாழவில்லை என்றும் அறிந்தேன் . ஆசிரியருக்கு மனநிலை சரியாக இல்லை என்றால் எப்படி உற்சாகத்துடன் பாடம் சொல்ல முடியும்? கிருஷ்ணய் யங்காரை நம்பி செய்த ஏற்பாடு பயனற்றுப்போயிற்று. இராகவ அய்யங்கார் புகழ்பெற்ற பாத்திரக்கடையினர் மகன் திரு, விசயராகவனை வைத்திருந்திருக்கலாம்; அவர் உற்சாகமாகப் பாடம் சொல்வார். அதை இப்போது நினைத்துப் பயன் என்ன?’ என்று வாளா இருந்து விட்டேன். பையன் வரவில்லை' என்று விசுவநாதன் ஒரு கடிதம் எனக்கு எழுதி இருக்கலாம்; அதை அவர் செய்ய வில்லை. இப்படியெல்லாம் நடைபெற்றது பையனுடைய ஊழ் என்று மன அமைதி கொண்டேன். இராமலிங்கம் P.U.C, படித்த ஆண்டு பதினேழு முறை மாணவர்கள் வேலை நிறுத்தம் நடைபெற்றது. அப்போது கல்லூரி முதல்வராக இ ரு ந் த வர் டாக்டர்வ.சுப. மாணிக்கம். யார் முதல்வராக இருந்தாலும் வேலை நிறுத்தம் என்று ஒன்றுநேர்ந்த ல் யாராலும்ஒன்றும் செய்ய முடியாது. மாணவர் விடுதியில் ஏதாவது கலாட்டா நேரிட்டால் அது பெரும்பாலும் அரிசன மாணவர்கள் தாம் காரணமாக இருப்பர். வேறு இனத்தைச் சார்ந்தவர் களும் காரணமாக அமையலாம் அடிக்கடி வேலை நிறுத்தம் இருந்தமையால் பாடங்கள் சரியாக நடைபெறுவதில்லை. தேர்வுக்குரிய பகுதிகள் முற்றிலும் கற்பிக்க முடிவதில்லை. வேகமாக பகுதிகள் முடிவு பெற்றனவாகக் கைதட்டல்' செய்தாலும் பயன் இல்லை. உணவு கொள்வதில் நிதானம் மேற்கொள்ளுதல், நன்றாக மென்று விழுங்குதல், நேரம் விட்டு விட்டு உண்ணல், பல்வேறு வகை உணவுகளை