பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/280

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 நினைவுக் குமிழிகள்-4 உண்ணல்,செரிமானம் ஆவதற்கு நேரம் தருதல்-போன்ற முறைகள் மனத்தினால் கொள்ளக் கூடிய பாடங்களுக்கும் பெர்ருந்தும். உணவுக்குச் செரிமானம் இன்றியமையாதது போல, பாடத்தை மனத்தில் வாங்கிக் கொண்டு அசை போடுதலும் இன்றியமையாதது. பின்னால் ஆசிரியப் பயிற்சி பெற்றபோது கல்வி உளவியலால் இத்தெளிவு ஏற்பட்டாலும், மாணவனாக இருந்தபோதும் இந்த அறிவு, பயிலவேண்டிய முறை முதலியவற்றில் தெளிவு இருந்தது. திருச்சி புனித சூசையப்பர் கல்லூரியில் பயின்றவர்கட்கு இவை நல்லஇரண்டாவது இயற்கையாக (Second-mature), அமைந்துவிடும். திருப்பதியிலிருந்து விடுப்பு வாங்கிக்கொண்டு 3 முறை வந்து இயற்பியல், வேதியியல் பாடங்களை இராமலிங்கத் திற்கும்மாணிக்கவாசகனுக்கும் (கணக்குத் தணிக்கையாளர் சொ. நாராயணன் செட்டியாரின் மகன்) சொல்லிப் பகுதி களை முடித்தேன். நான் அங்ங்ணம் வந்து சொல் வி யிராவிடில் இருவரும் தேறியிருக்க மாட்டார்கள். பி.எஸ்சி யில் கூட இராமலிங்கத்திற்கு இடம் கிடைத்திராது. திருப்பதி வந்த பிறகும் ரிஷிவேலி பையன் ஜான் என்பவனோடு சேர்ந்து விளையாட்டு மைதானத்தில் காலங்கழித்துக் கொண்டு நன்கு படிக்கவில்லை. அங்க வேதியியல் (Organic Chemistry) நான் கற்பிப்பதாகச் சொன்னேன். நன்றாகப் படித்தால் 90 விழுக்காடு வாங்க லாம்: படிக்காவிட்டால் தேறமுடியாது போதற்கும் வாய்ப்பு உண்டு என்றும் எச்சரித்தேன்; இதற்குச் செவி சாய்க்கவில்லை. 29% (30% வாங்கவேண்டியது) பெற்று தேர்வில் தோல்வியுற்றான். தேர்வாளர் 3 ே போட்டிருக்கலாம். அப்படிப் போட்டிருந்தால் பையன் பல்கலைக் கழகத்தில் முதல் வகுப்பும் முதல் நிலையும் பெற்றிருப்பான். என்ன செய்வது? ஊழ் என்று வாளா இருந்து விட்டேன். ஜான் முதல் வகுப்பில் சேர்ந்து விட்டான். w