பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/283

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராமலிங்கம் 249 மற்றொருபையனும் (மதனபள்ளியைச் சேர்ந்தவன்) சேர்வதற்காக வந்திருந்தான் அவன் P.U.C. படிக்காமல் 13வது வகுப்பு படித்து பட்டப்படிப்பில் சேர்ந்தவன் 12வது வகுப்பில் அக்காலத்தில் பள்ளியில் 25% மதிப்பெண்களும் தேர்வுகளில் 75% மதிப்பெண்களும் சேர்க்கப் பெறும். இது நல்ல முறையாக இருப்பினும் பெற்றோர்களின் செல்வாக்கால் 23125 வரையும் கணிதம் போன்ற பாடங் களில் 25, 25 பெறும் வாய்ப்பும் இருந்தது. இறுதியான மதிப்பீட்டில் இராமலிங்கம் 77ஆயும் மதன பள்ளி பையன் 782ம் பெற்றனர். ; மதிப்பெண் குறைவால் இராமலிங்கத்திற்கு இடம் கிடைக்காது போய்விட்டது. மதன பள்ளிப் பையனுக்கு இடம் கிடைத்தது. இப்போது என் மனம் சோர் வுற்றதுபோல் என் வாழ்க்கையில் எந்தக் காலத்திலும் சோர்வுறவில்லை. 1. 1. T யின் முடிவு பிற்பகல் 3 மணிக்குத் தெரிந்தது. பையனைத் திருப்பதிக்கு அனுப்பிவிட்டு நான் மட்டிலும் சென்னைப் பல்கலைக் கழகத்திற்கு 2. 45க்கு வந்து சேர்ந்தேன். இங்கு M.Sc இடத்திற்கு மனுப்போடுவதற்கு முன்னரும், அதற்குமுன் பல தடவையும் துணைவேந்தர் N. D. சுந்தரவடிவேலுவைப் பார்த்து ஓரிடத்திற்கு ஏற்பாடு செய்யுமாறு கேட்டிருந்தேன். அவர் பையன் கோரும் நான்கு இடங்களில் கோவை P.S.G. கல்லூரிக்கு முதல் இடம் தருமாறு சொல்லி இருந்தார்; அங்ஙனமே மனுவிலும் குறித்திருந்தோம். துணைவேந்தர் தில்லிக்குப் போயிருந்ததால் அவரைப் பார்கக முடியவில்லை. மாணவர்களைச் சேர்க்கும் பொறுப்பிலுள்ள துணைப் பதிவாளரைப் பார்த்தேன். அவர் பையன் பெயரைக் கேட்டார்: சொன்னேன். அவனுக்கு இடம் கிடைத்து விட்டது; இன்றுதான் பட்டியலை அஞ்சலில் சேர்த்தேன்; நீங்கள் பையனை இட்டுக் கொண்டு கோவை செல்ல லாம்’ ’ என்றார். களைத்துப் போய் வெய்யலில் வந்த எனக்கு குளுகோஸ் சேர்த்த குளிர்ந்த எலுமிச்சை சாறு